ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி, அனைத்தையும் பார்த்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி, அனைத்தையும் பார்த்த ராஜேஷ் - இன்றைய
ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி, அனைத்தையும் பார்த்த ராஜேஷ் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகாவின் காலில் விழுந்து கெஞ்சும் கோபி, அனைத்தையும் பார்த்த ராஜேஷ் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகாவின் காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஆனால் ராதிகா அவரை ஏற்றுக் கொள்ளாமல் வெளியே போக சொல்கிறார். அவர் போக முடியாது என சொல்ல அவரை பிடித்து வெளியே தள்ளுகிறார். அப்போது ராஜேஷ் அவரை பார்த்துவிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவின் அம்மா மட்டும் தான் இருக்கிறார். அவர் கோபியிடம் ராதிகா உங்க மீது கோவமாக இருக்கிறார். அதனால் நீங்க கொஞ்ச நாள் இப்படியே அமைதியா இருங்கள் என சொல்ல ஆனால் கோபி நான் அப்படியே விட்டுவிட்டால் ராதிகா என்னை மறந்துவிடுவாள் என சொல்கிறார். பின் கோபி நான் ராதிகாவிற்காக எந்த அளவு வேண்டும் என்றாலும் இறங்கி போக தயாராக இருக்கிறேன் ஆனால் என சொல்ல நீங்க சொல்வது எனக்கு புரிகிறது. நீங்க எந்த தவறும் செய்யவில்லை என தான் நானும் சொல்கிறேன் என ராதிகா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது ராதிகா வந்துவிட நன்றாக இருக்கிறது நீங்க பேசுவது என சொல்கிறார். ராதிகா உன்னிடம் மண்டியிட்டு நான் மன்னிப்பு கேட்கிறேன் நாம இருவரும் சேர்ந்து புது வாழ்க்கை வாழலாம் என சொல்லி காலில் விழுகிறார். ஆனால் ராதிகா எழுந்திரிங்க முதலில் வெளியே போங்க என சொல்லி சத்தம் போடுகிறார். கோபி முடியாது என சொல்ல ஆனால் ராதிகா கேட்கவில்லை முதலில் வெளியே போகாமல் இருந்தால் எதாவது விபரீதம் ஆகிவிடும் என சொல்கிறார்.

பின் கோபி நான் போகமாட்டேன் என சொல்ல நடிக்காதீங்க கோபி மயூராவை ஸ்கூலில் எதற்கு சென்று பார்த்தீங்க என சத்தம் போடுகிறார். பின் கோபியை வெளியே தள்ளிவிட அக்கம் பக்கத்தினர் வந்துவிடுகிறார்கள். அப்போது அங்கே ராஜேஷ் வந்து கோபியை ராதிகா வெளியே தள்ளுவதை பார்த்துவிடுகிறார். கோபி மீண்டும் வெளியே வர ராதிகா கோபியை வெளியே போக சொல்கிறார். கோபி வேற வழி இல்லாமல் வெளியே போகிறார். அப்போது ராஜேஷ் என்ன நடந்திருக்கும் என தெரியாமல் இருக்கிறார்.

பின் அக்கம் பக்கத்தினர் வந்து என்ன ஆச்சு உங்க புருஷன் கூட தான் சண்டை இவருடனும் சண்டையா என கேட்க ராதிகாவின் அம்மா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்கிறார். பின் ஜெனி அம்மா டூர் போவதாக சொல்ல ஜெனியை அழைக்கிறார். ஆனால் ஜெனி நான் வரவில்லை என சொல்லிவிடுகிறார். பின் பாக்கியாவிடம் டூர் பற்றி சொல்ல இனியாவும் பாட்டியும் டூர் போக வேண்டும் என ஆசைப்படுகின்றனர். எழில் நான் ஏற்பாடு செய்கிறேன் என சொல்ல ஜெனி நான் செழியனிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறேன் என சொல்கிறார்.

ஜூன் 26 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – CISCE & CBSE நிர்வாகம் முடிவு!

செழியனிடம் சென்று டூர் பற்றி சொல்ல முதலில் ஜெனி அம்மா அப்பா உடன் போவதாக நினைத்து சரி என செழியன் சொல்கிறார். பின் நம்ம குடும்பத்துடன் என சொல்ல அதை கேட்டு செழியன் பின் வாங்குகிறார். எல்லா செலவையும் செய்து என்னால் ஏற்பாடுகளை செய்ய முடியாது என செழியன் சொல்கிறார். அதை கேட்டு ஜெனி கோவப்பட நீ செய்வாய் என நான் சொல்லிவிட்டேன் என சொல்கிறார். ஆனால் செழியன் முடியாது என சொல்ல சொல்கிறார். பின் ஜெனி நானே ஏற்பாடுகளை பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

அங்கிள் சில நாட்களாக சோகமாக இருக்கிறார் அதனால் அவருக்கு டூர் போனால் நன்றாக இருக்கும் என ஜெனி சொல்கிறார். பின் பாக்கியா ராதிகா வீட்டிற்கு வர ராதிகாவின் அம்மா பாக்கியாவை பார்த்து கோபப்படுகிறார். அப்போது ராதிகாவிடம் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டதா என கேட்க இல்லை டீச்சர் அப்படியே தான் இருக்கிறது என ராதிகா சொல்கிறார். ஒவ்வொரு முறையும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என பாக்கியா சொல்ல, ராதிகாவின் அம்மா இவளுக்கு என்ன ராதிகா மீது அக்கறை விவாகரத்து கொடுத்துவிட்டு ராதிகா வாய்யை கிளறுகிறார் என நினைத்து கொண்டு அது பற்றி ராதிகாவிடம் சொல்கிறார். ராதிகா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here