ராதிகா பெயரை சொல்லி சத்தியம் செய்ய போகும் கோபி, வெளியே போக சொன்ன பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
ராதிகா பெயரை சொல்லி சத்தியம் செய்ய போகும் கோபி, வெளியே போக சொன்ன பாக்கியா - இன்றைய எபிசோட்!
ராதிகா பெயரை சொல்லி சத்தியம் செய்ய போகும் கோபி, வெளியே போக சொன்ன பாக்கியா - இன்றைய எபிசோட்!
ராதிகா பெயரை சொல்லி சத்தியம் செய்ய போகும் கோபி, வெளியே போக சொன்ன பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி இனியாவிற்காக பாக்கியாவை அழைக்க வருகிறார். பாக்கியா இனிமேல் தவறு செய்யமாட்டேன் என சத்தியம் செய்ய சொல்ல, ஆனால் கோபி ராதிகா பெயரை சொல்லி சத்தியம் செய்கிறார். அதனால் பாக்கியா வர மறுக்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவை கோபி அவமானப்படுத்துவது போல பேசுகிறார். எல்லாரையும் உன்னை கூப்பிட வர சொல்லி அவர்களை அலைய விடுறியா என கேட்க எழிலிற்கு கோவம் வருகிறது. உடனே செல்வி தடுக்க, கோபி நான் உன்னை வீட்டை விட்டு வெளியே போ என சொல்லவே இல்லையே அப்படி நான் நினைத்து கூட இல்லை என கோபி சொல்கிறார். பின் மனிதர் தவறு செய்வது வழக்கம் தான் அதை திருத்தி கொள்வது தான் சரி என சொல்கிறார். பின் பாக்கியா அப்போ நான் தான் தவறு செய்தேனா என சொல்கிறார்.

தவறு செய்தது நான் தான் ஆனால் அதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்து என்னுடன் வாழ்ந்து பார்த்தால் தான் நான் திருந்திவிட்டேனா என பார்க்க முடியும் என சொல்ல, பின் பாக்கியா தவறு செய்ததை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் போதும் என நினைக்க ஆனால் கோபி நீ வீட்டிற்கு வந்தால் உன் தன்மானம் குறைந்துவிடும் என நினைக்கிறாய் என சொல்கிறார். நான் 28 வருசமாக உழைத்து கொண்டிருக்கேன் பசங்க படிப்பு கல்யாணம் எல்லாம் என்னுடைய படிப்பில் தான் நடந்தது என கோபி சொல்கிறார். எல்லாம் நாம குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என தான் செய்தேன், நான் செய்த தவறை பெரிது படுத்துகிறாய், நான் செய்த நல்லது உனக்கு தெரியவில்லையா என கோபி கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நான் இவ்வளவு பேசுகிறேன் நீ எதுவும் பேசாமல் இருக்கிறாய் என கேட்கிறார். பின் பாக்கியா இனிமேல் வாழ்க்கையில் இந்த தவறை செய்ய மாட்டேன் என என்ன நிச்சயம் என கேட்கிறார். இனிமேல் எல்லாம் தெரிந்துவிட்டது அதனால் பிரச்சனை இல்லை என செய்தால் நான் என்ன செய்வது அதனால் உத்தரவாதம் கொடுங்க நான் வருகிறேன் என பாக்கியா கேட்கிறார். கோபி வேற வழி இல்லை கோபி அங்கே இனியா அம்மாவை சமாளிக்க முடியாது என கோபி நினைத்துக்கொண்டு, இனிமேல் நீ தான் என் வாழ்க்கை ராதிகா என கோபி சத்தியம் செய்ய போகிறார்.

பாக்கியா அதை தடுக்க எழில் செல்வி அதிர்ச்சி அடைகின்றனர். பாக்கியா கையெடுத்து கும்பிட்டு வெளியே போக சொல்கிறார். கோபி எதோ தெரியாமல் சொல்லிவிட்டேன் என சொல்ல, பாக்கியா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் கோபி அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். எழில் வெளியே நின்று கோபி பேசியதை நினைத்து வருத்தத்துடன் பார்க்கிறார். பின் எழில் பாக்கியாவிற்கு சாப்பாடு வாங்கி கொண்டு வர பாக்கியா வேண்டாம் என சொல்கிறார். எழில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதை தாங்கி கொள்ள முடியவில்லை என சொல்கிறார்

ஆனால் நீ என்ன முடிவு செய்தாலும் நான் உன்னுடன் இருக்கிறேன் என எழில் சொல்கிறார். எனக்கு இனியா தாத்தா பாட்டி என எல்லாரையும் நினைத்தால் பயமாக இருப்பதாக சொல்ல, பாக்கியா என்னை எங்கையாவது வெளியே கூட்டிக் கொண்டு போ என சொல்கிறார். பின் எழில் உன்னை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது.மறுபக்கம் மயூராவிற்கு உடம்பு சரி இல்லாமல் இருக்கிறது. ராதிகாவும் அவருடைய அம்மாவும் பார்த்துக் கொள்கின்றனர். இன்னும் மயூராவிற்கு சரியாகவில்லை என ராதிகாவின் அம்மா சொல்ல, இன்னும் 2 3 நாட்களில் சரியாகிவிடும் என ராதிகாவின் அண்ணன் சொல்கிறார்.

இன்னைக்கு ஊருக்கு போவதாக சொன்னீங்க என மயூரா கேட்க இப்போ உனக்கு உடம்பு சரி இல்லை அதனால் போகவில்லை என சொல்கிறார். உனக்கு சரி ஆனதும் போகலாம் என சொல்ல ராதிகா வருத்தமாக இருப்பதை பார்த்து மயூரா கேள்வி கேட்கிறார். ராதிகா பாக்கியா கேட்ட கேள்விகளை நினைத்து பார்க்கிறார். உங்களை தங்கச்சி போல நினைத்தேன் ஆனால் நீங்க எனக்கு துரோகம் செய்துவிட்டீர்கள் என சொன்னதையும், மயூரா நன்றாக இருக்க வேண்டும் என சொன்னதையும் நினைத்து பார்க்கிறார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ செய்யாவிடில் கார்டு ரத்து!

மறுபக்கம் எழில் பாக்கியாவை பீச் அழைத்து செல்கிறார். அப்போது பழைய பாடல் ஓடுகிறது. பாக்கியா அதை கேட்டு கொண்டு நான் கல்யாணம் ஆகி போன போது இந்த பாடல் தான் ஓடியது என சொல்கிறார். அன்று புதிதாக கல்யாணம் செய்தவர் பார்த்தது போல இல்லாமல் இதை என் தலையில் கட்டி வைத்துவிட்டார்கள் என பார்த்தார். அந்த பார்வை 25 வருசமாக மாறவில்லை என சொல்ல, எழில் அம்மா வருத்தப்படுவதை நினைத்து பார்க்கிறார். பின் எழிலிடம் உனக்கு எப்போ தெரியும் என கேட்க, அப்பாவை பற்றி எப்போ தெரியும் என கேட்கிறார்.

ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்க, ஆனால் நீ மறைமுகமாக என்னிடம் சொல்லி இருக்கிறாய் என பாக்கியா சொல்ல எழில் ஆமாம் என சொல்கிறார். நீ தான் அவரை பெரிதாக கொண்டாடி கொண்டிருந்தாய் இப்போ அதில் இருந்து வெளியே வர தோன்றியதே என சொல்கிறார். உன் அப்பா பற்றி தெரிந்ததும் நீ மிகவும் கஷ்டப்பட்டு இருப்பாய் என பாக்கியா சொல்ல எனக்கு கஷ்டத்தை விட கோவம் தான் இருந்தது என எழில் சொல்கிறார். அப்பறம் தான் தாத்தாவிற்கு தெரியும் என்பது எனக்கு தெரிய வந்தது, அவரிடம் கோவமாக பல முறை பேசி இருக்கேன் ஆனால் அவர் திருந்தவில்லை. நீ வருத்தப்படுவாய் என நான் உன்னிடம் சொல்லவில்லை. அவர் சரியாகிவிடுவார் என நினைத்தோம் என எழில் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!