கோபியை மன்னிப்பு கேட்க சொல்லும் ஈஸ்வரி, பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி – இன்றைய எபிசோட்!

0
கோபியை மன்னிப்பு கேட்க சொல்லும் ஈஸ்வரி, பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை மன்னிப்பு கேட்க சொல்லும் ஈஸ்வரி, பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி - இன்றைய எபிசோட்!
கோபியை மன்னிப்பு கேட்க சொல்லும் ஈஸ்வரி, பாக்கியாவை சந்தித்து பேசும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி கோபியிடம் பாக்கியா இல்லாமல் இனியா கஷ்டப்படுவதாக சொல்கிறார். நீ சென்று மன்னிப்பு கேட்டாள் பாக்கியா வருவாள் என சொல்ல உடனே கோபி புதிய திட்டம் ஒன்றை தீட்டுகிறார். பின் பாக்கியாவை சந்தித்து பேசுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி தாத்தா செழியன் என அனைவரும் அமர்ந்திருக்க ஜெனி வந்து இப்படியே இருந்தால் எப்படி என கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இனியா என்ன செய்கிறாள் என கேட்க அவள் போனை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என ஜெனி சொல்கிறார். நீங்க எல்லாரும் சாப்பிடாமல் இப்படி இருக்கீங்க இனியா மட்டும் எப்படி எல்லாம் செய்வாள் என ஜெனி கேட்கிறார். இந்த குடும்பம் இப்படி ஆகிவிட்டதே என தாத்தா வருத்தப்பட ஜெனி நாம தாங்கி கொள்வோம் ஆனால் இனியா ரொம்ப கஷ்டப்படுவதாக சொல்கிறார்.

பின் ஈஸ்வரி இனியாவை எப்படி சமாதானம் செய்வது என தெரியவில்லை என சொல்கிறார். பின் ராமமூர்த்தி கோபி எங்கே என கேட்கிறார். செழியன் வந்துவிடுவார் என சொல்ல, கோபி வருகிறார். ஏன் இன்னும் தூங்காமல் இருக்கீங்க என கோபி கேட்க ஈஸ்வரி வீட்டில் நடப்பதை பார்த்தால் ஏன் உயிரோடு இருக்க வேண்டும் என தோன்றுவதாக சொல்கிறார். பின் தாத்தா இதெல்லாம் நடக்கும் என தெரிந்து தான நீ இப்படி எல்லாம் செய்தாய் இப்போ நடிக்காதே என சொல்கிறார். கோபி நானா பாக்கியாவை வெளியே போக சொன்னேன் என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஈஸ்வரி இனியா அம்மாவை நினைத்து கவலைப்படுவதாக சொல்ல இனியாவிடம் நான் பேசுகிறேன் என கோபி சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அவளிடம் என்ன பேச போகிறாய் நான் தான் இனிமேல் பாக்கியலட்சுமி என சொல்ல போறீயா என கேட்கிறார். அவள் வயசு பெண் எல்லாத்தையும் உன்னிடம் சொல்ல முடியாது அவளுக்கு அம்மா முக்கியம் என சொல்கிறார். பின் கோபி நான் என்னமோ பாக்கியாவை வெளியே போக சொன்னது போல பேசுறீங்க என கேட்கிறார்.

நீ எப்படியாவது கெஞ்சி பாக்கியாவை இங்கே கூட்டிக் கொண்டு வா என சொல்ல ஆனால் கோபி முடியாது என சொல்கிறார். தாத்தா ஏன் ராதிகாவை தான் கெஞ்சுவியா என கேட்க ஈஸ்வரி நீ இனியாவிற்காக பாக்கியாவை கூப்பிட வேண்டும் என சொல்கிறார். ஜெனியும் இனியாவிற்காக எதாவது செய்ய சொல்கிறார். நாங்க எல்லாரும் கூப்பிட்டோம் ஆனால் நீ போய் அவள் முன் நின்று நான் தவறு செய்துவிட்டேன் என சொல்லு என கெஞ்சி கேட்கிறார்.

கோபி நான் இப்பவே போகிறேன் என சொல்கிறார். இனியாவிற்காக நான் பாக்கியாவை கூட்டிக் கொண்டு வருகிறேன் என சொல்கிறார். பின் கோபி தனது நண்பரை சந்தித்து பேசுகிறார். அவரிடம் நான் இப்படி எல்லாம் நடக்கும் என நினைக்கவே இல்லை என சொல்ல சும்மா சொல்லாதே இப்படி எல்லாம் நடக்கும் என உனக்கு தான் தெரியுமே என சொல்கிறார். பின் கோபி ஆமாம் தெரியும் ஆனால் பாக்கியா இப்படி செய்வாள் என எனக்கு தெரியாது என சொல்கிறார்.

எனக்கு பாக்கியா பற்றி கவலை இல்லை ஆனால் என் பொண்ணு மிகவும் கஷ்டப்படுகிறாள் என சொல்கிறார். என் அம்மா ஆரம்பத்தில் கோவமாக இருந்தால் ஆனால் இப்போது பாக்கியா செய்வதை பார்த்து என் பக்கம் வந்துட்டாங்க என சொல்ல அப்போ ராதிகா என கேட்கிறார் கோபியின் நண்பர், அவள் மயூராவை அழைத்து கொண்டு மும்பை போக போகிறாள் என கோபி சொல்கிறார். பின் கோபி நண்பர் இது உன் வாழ்க்கை பிரச்சனை நீ கவனமாக இருக்க வேண்டும் என சொல்கிறார்.

இப்போதைக்கு பாக்கியாவை தற்காலிகமாக கூட்டி வந்துவிட வேண்டும். அப்போ தான் என் மகள் சமாதானம் ஆவாள். பாக்கியாவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்த பின் ராதிகாவிடம் பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி அப்பறம் பாக்கியாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு நிம்மதியாக இருக்க போகிறேன் என கோபி சொல்கிறார். பின் கோபி பாக்கியாவின் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கே செல்வி கோபியை பார்த்துவிட்டு எழிலை அழைக்கிறார்.

தமிழக காவல்துறையின் புதிய எச்சரிக்கை அறிவிப்பு – பிரதமர் வருகை எதிரொலி!

கோபி உள்ளே சென்று பாக்கியாவிடம் வீட்டில் இனியா ரொம்ப கஷ்டப்படுகிறாள் என சொல்கிறார். யாருடையும் பேசாமல் சாப்பிடாமல் கஷ்டப்படுகிறாள், நமக்கு இருக்கும் பிரச்சனையில் அவள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என கோபி சொல்கிறார். என் மீது இருக்கும் கோவத்தில் நம்ம குழந்தையை ஏன் பழி வாங்க நினைக்கிறாய் என கோபி கேட்கிறார். இது உனக்கே நியாயமாக இருக்கிறதா எத்தனை நாள் இப்படி இருப்பாய் அது வரை நம்ம பொண்ணு எவ்வளவு கஷ்டப்படுவாள் என கோபி கேட்கிறார். எல்லா தப்பும் செய்தது நான் தான் இனிமேல் அதை செய்ய மாட்டேன் என எல்லார் முன்னாடியும் சொல்லிவிட்டேன் என சொல்கிறார்.

நான் தவறு செய்த போது நம்பிய நீ இப்போது ஏன் என்னை நம்பவில்லை என கேட்கிறார். எனக்கு சின்ன வயதில் இருந்து என் மனைவி பற்றி கனவு இருந்தது ஆனால் எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. உனக்கு வீடு தான் உலகம் அப்படி இருக்கும் போது என் மனசு வேற பக்கம் போக தான செய்யும் , நானும் ராதிகாவும் காலேஜ் படிக்கும் போது இருந்து காதலித்தோம் ஆனால் அதன் பின் 25 வருஷம் பார்க்கவில்லை அதெல்லம் சொல்லி உன் மனதை காயப்படுத்தமாட்டேன். நீ வா கிளம்பு வீட்டிற்கு வா அங்கே எல்லாரும் உனக்காக காத்திருக்கின்றனர் என சொல்கிறார். எல்லாரும் உன்னை தேடி வர வைத்து அலைய விடுறீயா என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here