ராதிகா வீட்டிற்கு செல்வியுடன் வந்த பாக்கியா, குற்ற உணர்ச்சியில் இருக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ராதிகா வீட்டிற்கு செல்வியுடன் வந்த பாக்கியா, குற்ற உணர்ச்சியில் இருக்கும் ராதிகா - இன்றைய
ராதிகா வீட்டிற்கு செல்வியுடன் வந்த பாக்கியா, குற்ற உணர்ச்சியில் இருக்கும் ராதிகா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ராதிகா வீட்டிற்கு செல்வியுடன் வந்த பாக்கியா, குற்ற உணர்ச்சியில் இருக்கும் ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா செல்வி உடன் ராதிகா வீட்டிற்கு செல்ல முடிவு செய்கிறார். பின் ராதிகாவிடம் ஏன் என்னை ஏமாற்றினீர்கள் என கேள்வி கேட்கிறார். ராதிகா நான் தெரிந்து கொண்டே செய்யவில்லை என குற்ற உணர்ச்சியில் இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரி கூப்பிட்டும் போகாமல் இருப்பதை சொல்லி செல்வி சந்தோசப்படுகிறார். ஆனால் அங்கே இருப்பவர்கள் நீ இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என நினைத்தால் வருத்தமாக இருப்பதாக சொல்கிறார். அந்த ராதிகா உன்னிடம் நன்றாக பேசிவிட்டு கடைசியில் இப்படி ஒரு துரோகத்தை செய்துவிட்டாள் என செல்வி சொல்ல, உடனே பாக்கியா எழுந்து கொள்கிறார். செல்வியிடம் ஆட்டோ புடிக்க சொல்லி சொல்ல, எதற்கு என செல்வி கேட்கிறார்.

உன்னுடைய வீட்டிற்கு போக போறியா என செல்வி கேட்க பாக்கியா ஆட்டோ புடிக்க சொன்னேன் என சொல்கிறார். ஆட்டோவில் எங்கே போக என செல்வி கேட்க, பாக்கியா ராதிகா வீட்டிற்கு போக வேண்டும் என சொல்கிறார். அந்த பொம்பளை வீட்டிற்கு நீ ஏன் போக வேண்டும் என செல்வி கேட்க சொல்வதை செய் என பாக்கியா சொல்கிறார். பின் செல்வி அங்கே நீ போக வேண்டாம் என சொல்ல ஆனால் பாக்கியா கேட்காமல் வெளியே செல்கிறார். செல்வி நானும் வருகிறேன் என சொல்ல அமைதியாக இருந்தால் என்னுடன் வா என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் செல்வி கதவை மூடிவிட்டு அங்கே நீ தனியாக போக வேண்டாம் என சொல்ல கதவை மூடுவதற்குள் பாக்கியா வெளியே கிளம்பி விடுகிறார். பின் செல்வி பின்னாடி வர அந்த ராதிகா உன்னை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கிறார் என பேசிக் கொண்டே வர பாக்கியா அமைதியாக வர சொல்கிறார். பின் ராதிகா வீட்டிற்கு வந்து கதவை தட்ட ராதிகா திறந்து உள்ளே வாங்க டீச்சர் என கேட்கிறார். ராதிகா பாக்கியாவை உட்கார சொல்ல ஆனால் பாக்கியா உட்காரவில்லை. பின் ராதிகா என்ன ஆச்சு டீச்சர் என கேட்க, பாக்கியா நீங்க ஊருக்கு சென்றுவிடுவீர்கள் என நினைத்து வந்தேன் என சொல்கிறார்.

செல்வி இவங்கலாம் ஊருக்கு போகமாட்டாங்க என சொல்ல ராதிகா ஏன் இவங்க இப்படி எல்லாம் பேசுறாங்க என கேட்கிறார். பின் பாக்கியா ஏன் இப்படி எல்லாம் என கேட்க ராதிகா என்ன ஆச்சு என கேட்கிறார். கடைசியில் நீங்களும் என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என சொல்ல, ராதிகா எனக்கு ஒன்றும் புரியவில்லை என சொல்கிறார். பாக்கியா எனக்கும் ஒன்றும் புரியவில்லை என சொல்கிறார். பின் ராதிகா சொல்ல வந்ததை சொல்லுங்க என சொல்ல, நீங்க கல்யாணம் செய்து கொள்ள போவது யாரு என பாக்கியா கேட்க, அதெல்லாம் பிரச்சனை ஆகிவிட்டது நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என ராதிகா சொல்கிறார்.

நான் இங்கே இருந்தே போய்டுவேன் என சொல்ல, பாக்கியா நான் கேட்டதுக்கு பதில் வேண்டும் என சொல்கிறார். பின் ராதிகா உங்களுக்கு என்ன தெரியும் என எனக்கு தெரியாது ஆனால் நான் யாரையும் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் நான் மும்பைக்கு போய்டுவேன் என சொல்கிறார். பின் பாக்கியா நேற்றே ஏன் போகவில்லை என கேட்க மயூராவிற்கு உடம்பு சரி இல்லை என ராதிகா சொல்கிறார். மயூராவிற்கு உடம்பு சரியில்லையா இல்லை உங்களை கல்யாணம் செய்து கொள்ள இருப்பவருக்கு உடம்பு சரி இல்லையா என கேட்கிறார்.

பின் பாக்கியா கதை ஒன்றை சொல்கிறார். செல்வி அக்காவிற்கு எல்லாம் தெரிந்துவிட்டது என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது நீங்க யாரு கோபி சார் யாரு என எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என சொல்ல, பாக்கியா ஏன் ஏமாற்றிவிட்டீர்கள் ராதிகா என கேட்கிறார். அப்படி எல்லாம் இல்லை டீச்சர் ராதிகா சொல்ல, நான் எல்லாம் பாத்தேன் மருத்துவமனையில் இனியா அப்பாவிற்கு அடிபட்டு இருப்பதாக போன் வந்தது நான் பதறி வேகமாக வந்தேன்,

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை விவகாரம் – நீதிபதியின் பரபரப்பு கருத்து!

அங்கே நர்ஸ் நீங்க யாரு என கேட்டார்கள் நான் அவருடைய மனைவி என சொல்ல, மனைவி தான் உள்ளே இருக்காங்களே என சொல்லி என்னை உள்ளே அனுப்பவே இல்லை. உள்ளே வந்து பார்த்தேன் நீங்க அவருடைய கையை பிடித்துக் கொண்டு இருந்தீங்க நான் யாரை நினைத்து வருத்தப்பட என பாக்கியா கேட்கிறார். ராதிகா அழுது கொண்டே இருக்க நான் உங்களை நம்பினேன் ஆனால் நீங்க இப்படி ஏமாற்றிவிட்டிர்கள் என சொல்ல, ராதிகா எனக்கு உண்மையாகவே தெரிந்து நடக்கவில்லை என ராதிகா பாக்கியா கையை பிடித்து அழ, பாக்கியா நான் உங்களை சொந்த தங்கச்சி போல நினைத்தேன் என சொல்கிறார். ஆனால் உங்களால் எப்படி இந்த உண்மையை மறைக்க முடிந்தது என கேட்கிறார். முதலில் தெரியாது ஆனால் தெரிந்த போது ஏன் என்னிடம் சொல்லவில்லை என பாக்கியா கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here