ஈஸ்வரி பாட்டி கூப்பிட்டும் வராத பாக்கியா, கோபியை காரணம் சொல்லும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

1
ஈஸ்வரி பாட்டி கூப்பிட்டும் வராத பாக்கியா, கோபியை காரணம் சொல்லும் ஈஸ்வரி - இன்றைய
ஈஸ்வரி பாட்டி கூப்பிட்டும் வராத பாக்கியா, கோபியை காரணம் சொல்லும் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஈஸ்வரி பாட்டி கூப்பிட்டும் வராத பாக்கியா, கோபியை காரணம் சொல்லும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி பாக்கியாவை பார்க்க சென்று கெஞ்சி கூப்பிடும் கூட பாக்கியா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். பாக்கியா வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். மறுபக்கம் பாக்கியா வராததற்கு கோபி தான் காரணம் என ஈஸ்வரி கோபியை திட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ஈஸ்வரி பாக்கியாவிடம் நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை என சொல்கிறார். நீ இங்கே இருந்தால் அங்கே எதுவும் நடக்காது என சொல்ல, நீ இல்லாமல் கோபி வருத்தப்படுகிறான் என சொல்கிறார். ஆனால் எழில் அவர் தெரிந்து தான் எல்லாம் செய்திருக்கிறார் இப்போ அம்மாவிடம் அவர் வருத்தப்படுவதாக சொல்கிறீர்கள் என கேட்க, இப்போ நான் சொன்னதை நினைத்து அவன் வருத்தப்படுவதாக சொல்கிறார். ஈஸ்வரி வீட்டிற்கு வா பாக்கியா என கூப்பிட என்னை எப்படி வர சொல்றீங்க இத்தனை நாள் உங்களை பற்றி நினைத்தது போதும் என சொல்கிறார்.

பின் ஈஸ்வரி இப்பவே பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வந்து கேட்கிறார்கள். சொந்தக்காரர்களுக்கு தெரிந்துவிட கூடாது இது 4 சுவற்றிற்குள் இருக்க வேண்டியது என சொல்லி வா பாக்கியா என கேட்கிறார். ஆனால் பாக்கியா வரமாட்டேன் என சொல்கிறார். நீங்க மறுபடியும் கூப்பிட்டு உங்க வார்த்தைக்கு என்னால் மரியாதை கொடுக்க முடியாமல் போய்விடுகிறது, என்னை மன்னித்துவிடுங்கள் அத்தை என சொல்ல, பாருடா இவளை என எழிலிடம் சொல்கிறார். எழில் விடுங்க பாட்டி அம்மாவிற்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இனியா படிப்பு பற்றி எங்களை பற்றி எல்லாம் அக்கறை இல்லையா என கேட்க எழில் விடுங்க பாட்டி நாம வீட்டிற்கு போவோம் என சொல்கிறார். என்னடா எழில் நான் கூப்பிட்டும் இவள் வரவில்லை என கேட்கிறார். பின் ஈஸ்வரி வருத்தத்துடன் கிளம்பிவிடுகிறார். செல்வி இது தான் சரியான முடிவு முன்ன மாதிரி ஏமாளியாக இருக்காதே என சொல்கிறார். மறுபக்கம் மயூராவிற்கு காய்ச்சல் அடிக்கிறது. ராதிகாவின் அம்மா எப்படி இருக்கிறாள் என கேட்க காய்ச்சல் குறையாமல் இருக்கிறது . மாத்திரை கொடுத்ததும் கொடுத்தும் சரியாக வரவில்லை என ராதிகா சொல்கிறார்.

பின் ராதிகாவின் அண்ணன் மருந்து வாங்கி கொண்டு வந்து கொடுக்கிறார். டாக்டரிடம் போவோமா என கேட்க வேண்டாம் என ராதிகா சொல்கிறார். பின் கிளம்பும் நேரத்தில் இப்படிஆகிவிட்டது என ராதிகா சொல்ல, இந்த நேரத்தில் கிளம்புவது முக்கியமா என ராதிகாவின் அம்மா கேட்கிறார். எல்லாம் தயாராக இருப்பதாக ராதிகா சொல்ல, புது இடத்திற்கு சென்று மருத்துவமனை தேடி குழந்தையை எப்படி பார்ப்பாய் என ராதிகாவின் அண்ணன் கேட்கிறார். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன் என ராதிகா சொல்ல, வேண்டாம் என ராதிகாவின் அண்ணன் சொல்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி பாக்கியா வரமாட்டேன் என சொன்னதை தாத்தாவிடமும் செழியனிடமும் சொல்லி வருத்தப்படுகிறார். நான் கூப்பிட்டே அவ வரவில்லை அப்பறம் எப்படி வருவாள் என நினைத்து வருத்தப்பட அப்போது கோபி கீழே வருகிறார். அப்போது செழியன் கூப்பிட கோபி வருகிறார். செழியன் பாட்டி கூப்பிட்டும் அம்மா வரமாட்டேன் என சொல்கிறார். கோபி அவள் இங்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டாள், வீட்டில் இருந்த மகாலக்ஷ்மி போய்விட்டாள் அந்த வீடே நன்றாக இருக்குமா என கேட்கிறார். கோபி எதுவும் பேசாமல் இருக்க இவனுக்கு ஒன்றுமே தெரியாது பாரு.

இதெல்லாம் நடந்தால் இப்படி எல்லாம் நாம கஷ்டப்படுவோம் என தெரிந்து தான் இவன் செய்திருக்கான் என தாத்தா சொல்கிறார். இனியா அம்மா இல்லாமல் எப்படி இருப்பாள் எல்லாத்தையும் நீ தான் ஆரம்பித்து வைத்தாய் என கேட்கிறார். இதெல்லாம் நம்ம சொந்தக்காரர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகும், பாக்கியா அம்மாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும் அவங்க உன்னை நிற்க வைத்து கேள்வி கேட்பார் எப்படி பதில் சொல்வாய். ஜெனி வீட்டிற்கு தெரிந்தால் அவங்க அப்பா வந்து விசாரிப்பார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வாய் என ஈஸ்வரி கேட்கிறார்.

TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – முக்கிய அறிவிப்பு!

இதெல்லாம் நீ யோசிக்கவே இல்லை என கேட்கிறார். பாக்கியா வீட்டிற்கு வராமல் இருந்தால் நான் சொன்னது எல்லாம் நடக்கும் என ஈஸ்வரி கேட்கிறார். ஈஸ்வரி இவன் அசிங்கப்பட கூடாது என்பதால் பாக்கியா இங்கே வர முடியுமா என தாத்தா கேட்க, நான் அப்படி சொல்லவில்லை பாக்கியா வீட்டில் இல்லாமல் இங்கே எப்படி நாம எல்லாம் இருக்க முடியும் என ஈஸ்வரி கேட்கிறார். பின் பாக்கியா இங்கே வராமல் இருந்தால் நான் உன்னிடம் இப்படி பேசிக் கொண்டு இருக்கமாட்டேன். அவள் வருவாள் என்ற நம்பிக்கையில் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவள் வராமல் இருந்தால் நாங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவோம் என சொல்கிறார். நாங்க சாகும் வரை உன் முகத்தை பார்க்கமாட்டோம் என சொல்ல கோபி ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார். பின் ஈஸ்வரி அவள் இங்கே வராமல் இருந்தால் உன் முகத்தை நாங்க பார்க்கவே மாட்டோம் என ஈஸ்வரி கோவமாக சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இதல்லாம் ஒரு பொழுது போக்கு, இப்படி ஒரு வாரம் பூராவும் காதுல பூ சுத்திர வேலைய விஜய் டிவி எப்ப நிறுத்தும். இப்படியே போனால் நாங்க மாறிடுவேம் பாத்துக்கோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here