அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
அம்மாவை கூப்பிட போகும் இனியா, வர மறுத்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி பாக்கியாவை வீட்டிற்கு வர தான் வேண்டும் என சொல்கிறார். எழில் அம்மா வரமாட்டார் என சொல்ல, இனியா சென்று பாக்கியாவை கூப்பிடுகிறார். ஆனால் பாக்கியா இனி இந்த வீட்டிற்கு வரமாட்டேன் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,ஈஸ்வரி எல்லாம் நடந்துவிட்டது அதற்காக பாக்கியா இங்கே வரமாட்டேன் என சொல்ல கூடாது என சொல்கிறார். அடுத்து உனக்கு கல்யாணம் நடக்கணும், இனியாவின் படிப்பு இருக்கிறது அதெல்லாம் இருவரும் கலந்து பேசி தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்ல, அதெல்லாம் நாம சொல்ல முடியாது என எழில் சொல்ல, இதில் சொல்வதற்கு என்ன இருக்கு வேற என்ன வழி இருக்கிறது. இங்கே வந்து பழையபடி வாழ்வது தான் ஒரே வழி என ஈஸ்வரி சொல்கிறார். அம்மா இங்கே வருவார் என எனக்கு நம்பிக்கை இல்லை என எழில் சொல்ல, இங்கே வராமல் எங்கே போவாள் என ஈஸ்வரி கேட்கிறார்.

கோபி தவறு செய்துவிட்டான் அதனால் இப்படி வராமல் இருந்தால் என்ன ஆகும் என கேட்கிறார். பின் ஈஸ்வரி பாக்கியா இல்லாமல் எப்படி இருக்க முடியும் என கேட்க,கோபியை வெளியே போக சொல் என தாத்தா சொல்கிறார். அவன் இனிமேல் தப்பு செய்யமாட்டான் அதனால் பாக்கியா வீட்டிற்கு வர வேண்டும் என சொல்கிறார். பின் எழில் பாக்கியா முடிவு எடுப்பார் என சொல்ல ஈஸ்வரி அவளை தனியாக முடிவெடுக்க சொல்லி நீ தான் சொல்கிறாயா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் இனியா அம்மா நான் கூப்பிட்டால் வருவாங்க நான் இப்பவே போறேன் என சொல்ல, ஈஸ்வரி ஆமாம் இனியா நீ கூப்பிட்டால் வருவாள் என சொல்கிறார்.ஜெனி ஆண்டிக்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும் என சொல்ல, இல்லை பெற்ற மகள் கூப்பிட்டால் கண்டிப்பாக வருவாள் என ஈஸ்வரி சொல்கிறார். இனியா ஜெனி பாக்கியாவை கூப்பிட செல்கின்றனர். இனியா பாக்கியாவை பார்க்க வர அம்மா என அழுகிறார். என்ன அம்மா நீ வீட்டிற்கு வராமல் இருக்கிறாய் எப்போ வீட்டிற்கு வருவாய் என கேட்கிறார். நீ இல்லாமல் வீடு நன்றாக இல்லை என இனியா சொல்கிறார்.

ஜெனி உங்களிடம் என்ன சொல்வது என தெரியவில்லை உங்களுக்கு நடந்தது ரொம்ப தவறான விஷயம் தான் என சொல்கிறார். இனியா வா அம்மா என கூப்பிட செல்வி இங்கே வந்து உங்க அம்மாவை கூப்பிடாமல் உன் அப்பாவிடம் கேள்வி கேட்க வேண்டியது தான என சொல்கிறார். நான் கேட்டேன் இனி டாடியிடம் நான் பேசமாட்டேன் என சொல்லி கையை பிடித்து இழுக்கிறார். ஆனால் பாக்கியா வரமாட்டேன் என சொல்கிறார். டாடி செய்த தவறுக்கு என்னை ஏன் தண்டிக்கிறாய் என கேட்க, நான் என்ன தண்டித்தேன் என பாக்கியா கேட்கிறார். டாடி செய்த தவறுக்கு அவருடன் பேசாமல் இரு என இனியா சொல்கிறார்.

இனி நான் அங்கே வரமாட்டேன் என பாக்கியா சொல்ல, இல்ல இனியா அங்கே தாத்தா பாட்டி செழியன் ஜெனி என எல்லாரும் இருக்காங்க நீ அவங்களுடன் இரு என சொல்ல, நான் கூப்பிட்டால் கூட வரமாட்டியா என இனியா கேட்கிறார். நான் அங்கே வந்தால் சரியாக இருக்காது என பாக்கியா சொல்ல, இனியா என் கூட இருக்க தான் வர சொல்கிறேன் என சொல்கிறார். அங்கே எல்லாரும் இருக்காங்க அவங்க பார்த்துக் கொள்வார்கள் என பாக்கியா சொல்கிறார்.

இனியாவை செல்வி அம்மா அங்கே இருக்கும் போது அக்கறை இல்லை என சொல்ல, என்னுடன் வருவியா மாட்டியா என இனியா கேட்கிறார். பாக்கியா முடியாது என சொல்ல, நீ வந்து இங்கே இரு என செல்வி சொல்கிறார். பாக்கியா உங்களுக்காக தான் இத்தனை வருஷம் எல்லாத்தையும் தாங்கி கொண்டு இருந்தேன் ஆனால் இனிமேல் அங்கே வந்தால் நான் இறந்ததற்கு சமம் என சொல்கிறார். ஜெனி இவளை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போ என சொல்ல, நான் கூப்பிட்டால் நீ வருவாய் என நினைத்தேன் என சொல்ல, நீ வீட்டிற்கு போ இனியா என பாக்கியா சொல்கிறார்.

TNPSC Group 4 & VAO தேர்வர்களுக்கான முழு மாதிரி தேர்வு – அறிவிப்பு வெளியீடு!

இனியா பொருள்களை எல்லாம் தூக்கி போட்டு வரமாட்டிய என கேட்க ஜெனி இவளை கூட்டிக் கொண்டு போ என சொல்கிறார். நீ செய்வது சரி இல்லை என இனியா சொல்ல, வீட்டிற்கு கிளம்புகிறார். ஜெனி பாக்கியாவிற்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கம் கோபி எழிலை பார்த்துவிட்டு பேசாமல் கிளம்புகிறார். அப்போது எழில் வந்து இந்த நிலைமை வீட்டிற்கு வர கூடாது என எத்தனை முறை சொன்னேன் ஆனால் அதை எல்லாம் நீங்க கேட்கவே இல்லை என சொல்ல ஆனால் கோபி எதுவும் பேசாமல் கிளம்புகிறார்.

பின் இனியா அழுது கொண்டே வந்து ஈஸ்வரியிடம் பாக்கியா வரமாட்டேன் என சொன்னதை சொல்கிறார். நான் போய் கூப்பிட்டும் வரமாட்டேன் என சொன்னதாக சொல்லி அழுகிறார். என்னை வீட்டிற்கு போக சொன்னார்கள் தவிர அம்மா என்னுடன் வரேன் என சொல்லவே இல்லை என சொல்லி அழுகிறார். இனிமேல் நான் சண்டை போட மாட்டேன் என சொல்லி பார்த்தேன் ஆனால் வரேன் என சொல்லவே இல்லை என சொல்கிறார். ஜெனி ஆன்டி இப்போ வந்தால் நன்றாக இருக்காது என தான் சொன்னார்கள் என சொல்ல, என்ன இருந்தாலும் புள்ள சென்று கூப்பிட்டு இருக்கிறாள் வர வேண்டியது தான என ஈஸ்வரி கோபப்படுகிறார். அப்பா தான் சாரி சொல்லிட்டாருல என சொல்ல, ஜெனி நீ பேசுவது சரி தான என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!