பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வர நினைக்கும் குடும்பம், தனிமைப்படுத்தப்படும் கோபி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வர நினைக்கும் குடும்பம், தனிமைப்படுத்தப்படும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வர நினைக்கும் குடும்பம், தனிமைப்படுத்தப்படும் கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியா மீண்டும் வீட்டிற்கு வர நினைக்கும் குடும்பம், தனிமைப்படுத்தப்படும் கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா வீட்டை விட்டு வெளியே சென்றதால் அனைவரும் மீண்டும் பாக்கியா வீட்டிற்கு திரும்ப வர வேண்டும் என நினைக்கின்றனர். பின் கோபி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். இனியாஅம்மாவை பிரிந்து இருக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழிலிற்கு தாத்தா போன் செய்து பாக்கியா எப்படி இருக்கிறாள் என கேட்கிறார். நீ அவளுடன் இருக்கிறாய் என்பதால் தான் நான் இங்கே தைரியமாக இருக்கிறேன் என சொல்கிறார். மனசு வெறுத்து போய் தான் அவள் சென்று இருக்கிறாள். அவளை தனியாக விடாமல் கூடவே இருந்து பார்த்துக் கொள் என சொல்ல, பாக்கியா எதாவது பேசினாலா என கேட்கிறார். எழில் இல்லை தாத்தா அம்மா எதுவுமே பேசவில்லை என அதான் பயமாக இருப்பதாக சொல்ல, அவள் எதோ தெளிவான முடிவை எடுத்து இருக்கிறாள் என சொல்கிறார்.

காலையில் எழுந்ததும் எனக்கு போன் செய் என சொல்கிறார்.பின் எழில் பாக்கியாவை பார்த்து வருத்தப்படுகிறார். மறுபக்கம் இனியா தூங்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி ஏன் தூங்காமல் இருக்கிறாய் என கேட்க எனக்கு தூக்கம் வரவில்லை என சொல்கிறார். நாளைக்கு ஸ்கூலிற்கு போக வேண்டும் என சொல்ல, நான் போகமாட்டேன் என இனியா சொல்கிறார். அம்மா இல்லாமல் நான் எப்படி போவது என கேட்க ஆன்டி வருவார்கள் நீ ஏற்கனவே 2 நாட்கள் ஸ்கூலிற்கு போகவில்லை என சொல்கிறார் ஜெனி.

TN Job “FB  Group” Join Now

அம்மா வர டைம் தேவைப்படும் அதை நாம கொடுக்க வேண்டும் என சொல்ல, இனியா அம்மா இந்த ரூமிற்கு வந்து படுக்கும் போது எனக்கு பிடிக்கவில்லை. அம்மாவை ஸ்கூலிற்கு வர வேண்டாம் என சொல்லிருக்கேன். எத்தனை முறை திட்டினாலும் அம்மா வந்து நிற்பார்கள் அம்மா மிகவும் பாவம் அப்பா ரூமிற்கு நான் தான் துரத்தி விட்டேன் என நினைத்து அழுகிறார். மறுபக்கம் கோபி நடந்ததை எல்லாம் நினைத்து வருத்தப்படுகிறார். ஜெனி எல்லாம் பழையபடி மாறும் என இனியாவிற்கு ஆறுதல் சொல்ல, கோபி இனியா ரூமிற்கு வந்து பார்க்கிறார்.

அங்கே ஜெனி நீ எல்லாத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என சொல்ல கோபி அதை எல்லாம் கேட்டுவிட்டு வருத்தப்பட்டு பேசாமல் செல்கிறார். பின் செழியன் ரூமிற்கு சென்று பார்க்க அங்கே செழியனும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார். கிழே வந்து அடுப்படியை பார்த்த கோபி அடுப்படியில் சுத்தம் இல்லாமல் இருப்பதை பார்த்து கஷ்டப்படுகிறார். இங்கே வரும் போது எல்லாம் பாக்கியா காபி வேண்டுமா என கேட்பது நியாபகத்திற்கு வருகிறது. பின் ஈஸ்வரி ரூமிற்கு சென்று பார்க்க அவர்களும் தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

கோபி அதை எல்லாம் பார்த்துவிட்டு செய்த தவறை நினைத்து வருத்தப்படுகிறார். மிகவும் தனிமையாக அவர் நினைக்கிறார். தனது ரூமிற்கு சென்று படுக்க செழியன் கோபி ரூமிற்கு வந்து பார்க்கிறார். அங்கே கோபி தூங்கி கொண்டிருக்க ஏசியை போட்டுவிட்டு கிளம்புகிறார். கோபி எழுந்து பார்த்து வருத்தப்படுகிறார். பின் ஈஸ்வரி வந்து கோபிக்கு போர்வை போர்த்தி விடுகிறார். கோபி எழுந்து பார்த்து குடும்பம் வைத்துள்ள அக்கறையை நினைத்து கவலைப்படுகிறார். எல்லாரும் தூங்க முடியாமல் கஷ்டப்பட பாக்கியாவும் தூங்காமல் எழுந்து கொள்கிறார்.

எழில் பாக்கியாவை படுக்க சொல்ல, குடும்பத்தில் அனைவரும் பாக்கியா இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஜெனி பாக்கியாவை நினைத்து தூங்க முடியாமல் இருக்கிறார். மறுநாள் காலையில் ஜெனி எல்லாருக்கும் காபி போட்டு கொடுக்கிறார். ஜெனி காபி போட்டது நன்றாக இருப்பதாக ஈஸ்வரி சொல்கிறார். அப்போது எழில் வீட்டிற்கு வர இனியா அம்மா எங்கே என கேட்கிறார். பாக்கியா எப்படி இருக்கிறாள் என ஈஸ்வரி கேட்க, அவளை ஏன் தனியாக விட்டாய் என தாத்தா கேட்கிறார்.

TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

செல்வி அக்கா இருக்காங்க என சொல்ல, பாட்டி எப்போது இங்கே வருவா என கேட்கிறார். இனியா சீக்கரம் அம்மாவை வர சொல் என சொல்ல, அம்மா எதுவும் பேசவே இல்லை என எழில் சொல்கிறார். அம்மா என்ன முடிவு எடுத்தாலும் நாம துணையாக இருக்க வேண்டும் என எழில் சொல்ல, ஈஸ்வரி என்ன நடந்தாலும் அவ இங்கே வர தான் வேண்டும் என சொல்கிறார். அவள் எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கோபி தான் பாக்கியாவின் புருஷன் அதில் எதையும் மாற்ற முடியாது என ஈஸ்வரி சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here