வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியா, ஊரை விட்டு போக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!

0
வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியா, ஊரை விட்டு போக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் ராதிகா - இன்றைய எபிசோட்!
வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியா, ஊரை விட்டு போக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் ராதிகா - இன்றைய எபிசோட்!
வீட்டை விட்டு வெளியேறி அலுவலகத்திற்கு செல்லும் பாக்கியா, ஊரை விட்டு போக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி நடந்து கொண்டது பிடிக்காமல் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி தனது அலுவலகத்திற்கு செல்வி மற்றும் எழில் உடன் செல்கிறார். பின் ராதிகா ஊரை விட்டு போகலாமா வேண்டாமா என முடிவு செய்ய கஷ்டப்படுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ஏமாற்றியது எல்லாம் தெரிந்து வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார். அப்போது செல்வியும் எழிலும் பாக்கியா பின்னாடி நடந்து செல்கிறார். மறுபக்கம் இனியா அம்மா போய்ட்டாங்க என சொல்லி அழுகிறாள். ஜெனி இனியாவிற்கு ஆறுதல் சொல்கிறார். செழியன் என்ன அப்பா இதெல்லாம் நீங்க இப்படி எல்லாம் நடந்து கொள்வீர்கள் என நினைக்க கூட இல்லை என சொல்லி கோபப்படுகிறார். அப்போது ஈஸ்வரி இதெல்லாம் நன்றாக இருக்கிறதா என கேட்கிறார்.

பசங்க எதாவது தவறு செய்துவிட்டால் நீ தான் தண்டிக்க வேண்டும். ஆனால் நீயே இப்படி செய்துவிட்டாய் அதெல்லாம் நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். பின் பாக்கியா இனிமேல் வருவாளா என தெரியவில்லை என சொல்ல, இனியா இனிமேல் நான் அம்மா இல்லாமல் இங்கே இருக்கமாட்டேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அப்பாவை பாத்தியா முடியாத மனுஷன் எப்படி இருக்கிறார் என கேட்கிறார். இதெல்லாம் நம்ம குடும்பத்திற்கா நடக்க வேண்டும் என கேட்க ஈஸ்வரியிடம் ஜெனி நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்கு எதாவது நடக்க போகிறது என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

எனக்கு எதாவது ஆகட்டும் என சொல்ல, இனியா அம்மாவும் சென்றுவிட்டார் நீங்களும் போனால் நான் என்ன செய்வேன் என கேட்கிறார். ஈஸ்வரி வேற ஆம்பளைங்க தவறு செய்த போது ஏன் இப்படி இருக்கார்கள் என நினைத்தேன் என் மகன் அப்படி எல்லாம் இல்லை என நினைத்து பெருமை பட்டு இருக்கிறேன். ஆனால் நீ கல்யாணம் வரை சென்று இருக்கிறாய் என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார். பின் பாக்கியா அலுவலகத்திற்கு செல்ல, செல்வி நல்ல வேலை அக்கா அலுவலகத்திற்கு தான் போகுது என நினைத்து சந்தோசப்படுகிறார்

பின் பாக்கியா அலுவலகத்தில் வேலை செய்பவரை போக சொல்லிவிட்டு செல்வி பாக்கியாவிடம் பேசுகிறார். கோபி சாரை நம்பாதே நம்பாதே என எத்தனை முறை சொன்னேன் ஆனால் நீ நம்பாமல் இருக்கிறார். அன்னைக்கு துணி கடையில் பார்த்துவிட்டு அடித்து பேசினேன். ஆனால் நீ என்னை தான் திட்டினாய் என கேட்கிறார். உன் புருசனும் என் புருசனும் ஒன்று தான் என சொல்கிறார். அந்த ராதிகாவை பாரு உன்னிடம் நன்றாக பேசிக் கொண்டுஎவ்வளவு பெரிய காரியம் செய்து இருக்கிறாள் என கேட்கிறார்.

அந்த ராதிகாவை நம்பாதே மனதில் இருப்பதை சொல்லாதே என எத்தனை முறை சொன்னேன் என் பேச்சை நீ கேட்கவே இல்லை என சொல்கிறார். நீ எதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தாய் அவர் போனது போய்விட்டது என ராதிகா வீட்டிற்கு போகவா என கேட்கிறார். நீ அவர் சட்டையை பிடித்து அடித்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும் என சொல்கிறார். பின் செல்வி எழிலிடை நான் கேட்பது சரி தான என கேட்க எழில் இது போல ஒரு நாள் வர கூடாது என நினைத்தேன். எல்லாம் மாற வேண்டும் என நினைத்து அப்பாவிடம் பேசினேன் ஆனால் அந்த நாள் வந்துவிட்டது என சொல்லி வருத்தப்படுகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதுக்கு அப்பறம் நீ எடுக்கும் முடிவிற்கு நான் உன்னுடன் இருப்பேன் என எழில் சொல்ல, செல்வி எதாவது பேசு அக்கா என கேட்கிறார். பின் ராதிகா மயூராவை கூட்டிக் கொண்டு ஸ்கூலிற்கு செல்ல அப்போது ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் இதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். எத்தனை பேர் ஸ்கூல் மாறி சென்று இருக்கிறார். அது போல நினைக்காமல் ஏன் இப்படி பேசுறீங்க என கேட்க, எத்தனை பேர் குழந்தைகளின் சந்தோஷத்திற்காக இருக்கிறார்கள் என கேட்கிறார்.

ஆனால் ராதிகா இனிமேல் மயூராவிடம் இது பற்றி பேசி மனசை மாற்றாதீர்கள் என சொல்ல, கோபியை உனக்கு பிடித்து இருக்கிறதா என கேட்க பிடித்து இருந்தது என சொல்கிறார். பாக்கியா விஷயத்தை தவிர எதாவது பிரச்சனை இருக்கிறதா என கேட்க இல்லை என ராதிகா சொல்கிறார்.கோபி இப்போ கூட உன்னை திருமணம் செய்ய தயாராக இருக்கிறார். இப்போ வெளி ஊருக்கு போறீயே அங்கையும் இது போல பிரச்சனை வந்தால் என்ன செய்வாய் என கேட்கிறார். குழப்பத்துடன் வேற ஊரில் வாழ நினைக்கும் நீ இந்த ஒரு விஷயத்தை மறந்து சந்தோசமாக இருக்கலாம் என சொல்கிறார். அவர்கள் பேசியதை நினைத்து ராதிகா குழப்பத்தில் இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here