குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை சொன்ன பாக்கியா, நம்ப மறுக்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை சொன்ன பாக்கியா, நம்ப மறுக்கும் ஈஸ்வரி - இன்றைய
குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை சொன்ன பாக்கியா, நம்ப மறுக்கும் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
குடும்பத்தினர் முன்னிலையில் உண்மையை சொன்ன பாக்கியா, நம்ப மறுக்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா மருத்துவமனைக்கு வந்துவிட்டு கோபியை ஏன் பார்க்கவில்லை என ஈஸ்வரி கேள்வி கேட்க, இதுவரை இவர் இப்படி எல்லாம் செய்யமாட்டார் என நினைத்தேனோ அதை எல்லாம் நான் பார்த்தேன் என எல்லா உண்மைகளையும் பாக்கியா சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அதை நம்பாமல் இருக்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியிடம் நேற்று வந்தவர் யார் என உண்மையை சொல்லுங்கள் என கேட்க, ஈஸ்வரி அவனுக்கு உடம்பு சரியில்லை என சொன்னது உனக்கு புரியவில்லையா என கேட்கிறார். அப்போது கோபி பாக்கியாவிற்கு எதோ உண்மை தெரிந்திருக்கிறது என நினைத்து பாக்கியா நீ மருத்துவமனைக்கு வந்தியா என கேட்கிறார். ஈஸ்வரி என்ன நடக்கிறது இங்கே என கேட்கிறார். செல்வி என்ன நடக்கிறது என கேட்க பாக்கியா இதற்கெல்லாம் உன் அப்பா தான் பதில் சொல்ல வேண்டும் என எழில் சொல்கிறார்.

பின் கோபி நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என கேட்க, நேற்று மருத்துவமனையில் யார் பில் கட்டியது என கேட்க நான் வந்தது கூட உங்களுக்கு தெரியாதே அப்போ நான் கட்டி இருந்தால் நீங்க கண் விழிக்கும் போது உங்களை பார்க்க வந்திருப்பேன்ல என கேட்கிறார். கோபி நானே மயக்கத்தில் இருந்தேன் என சொல்ல எழில் என்ன சொல்கிறாய் என கேட்கிறார். செழியன் நீ தான் கட்டியதாக சொன்னார்கள் என கேட்கிறார். அப்போது பாக்கியா நான் தான் சொன்னேனே மனைவி என சொல்லிருப்பாங்க என கேட்க யார் மனைவி என சொல்லி பில் கட்டியது என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

என்னை மருத்துவமனைக்குள் பார்க்கவே விடவில்லை என பாக்கியா சொல்ல டிரீட்மென்ட் நடப்பதால் விடாமல் இருப்பார்கள் என செழியன் சொல்கிறார். அங்கே என்னை மட்டும் தான் விடவில்லை வேற ஒருவர் இருந்தார் என பாக்கியா சொல்கிறார். வேற யார் இருப்பார் என கோபி எதுவும் தெரியாமல் கேட்க பாக்கியா போதும் இதற்கு மேல் பொய் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். என் வாழ்க்கையில் எது நடக்க கூடாது என நினைத்தேனோ அதெல்லாம் நடந்துவிட்டது என சொல்கிறார்.

என்ன சொல்கிறாய் பாக்கியா என ஈஸ்வரி கேட்க பாக்கியா கேளுங்க நேற்று வந்தது யார் என கேளுங்க என சொல்கிறார். ஈஸ்வரி அதான் சொன்னேன்ல அவனுக்கு உடம்பு சரியில்லை என சொல்ல பாக்கியா பதில் சொல்லும் அளவிற்கு உடம்பு நன்றாக தான் இருக்கிறது என சொல்கிறார். தாத்தா பதில் சொல்லுடா என சொல்ல கோபி என்ன சொல்ல புரியவில்லையே என சொல்கிறார். ஈஸ்வரி நேற்று ஒருவன் வந்து அவனுடைய மனைவி உடன் உனக்கு பழக்கம் இருக்கிறது என எதோ சொல்கிறான் என சொல்கிறார்.

கோபி யார் வந்தார் என்னை பற்றி ஏன் சொல்ல வேண்டும் என சொல்ல பாக்கியா எல்லாம் முடிந்துவிட்டது என சொல்கிறார். ஈஸ்வரி என்ன ஆச்சு என சொல்லுங்கள் என சொல்ல, எழில் நடந்ததை சொல்லு என சொல்கிறார். நான் மருத்துவமனைக்கு போனேன் அங்கே என்னை விட வில்லை, ஸ்கேன் பண்ண பில் கட்ட வேண்டுமா என கேட்க அவங்க கட்டியாச்சு என சொல்கிறார்கள். டாக்டர் பார்த்து பேச வேண்டும் என சொன்னால் அவங்க பார்த்து பேசிட்டாங்கனு சொன்னாங்க, இவர் முழிச்சுட்டார் பார்க்கலாமா என கேட்டால் அவங்க பார்க்க போயிருப்பதாக சொல்கிறார்.

தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!

நர்ஸ் நீங்க யார் என கேட்க அவங்க மனைவி என சொன்னேன், நீங்க மனைவி என்றால் அப்போ உள்ளே இருப்பது யார் என கேட்டு என்னை கேவலமாக பார்த்தார்கள் என சொல்கிறார்.நான் இவரை பார்க்க உள்ளே சென்றேன் ஆனால் எனக்கு முன்னாடி மருத்துவமனைக்கு வந்த அவங்க கூட இவர் கையை பிடித்துக் கொண்டு நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன் நீ இல்லாமல் நான் செத்துருவேன் என சொல்லிக்கொண்டு இருந்ததை என் காதால் நான் கேட்டேன் என சொல்கிறார்.

இத்தனை நாள் இவருக்கு பிரச்சனை அதை சரி செய்ய வேண்டும் என நாம யோசித்துக் கொண்டு இருந்தோம் ஆனால் இவர் அவங்க விட்டு சென்றுவிடுவார்கள் என்ற பயத்தில் தான் சோகமாக இருந்திருக்கிறார் என சொல்கிறார். ஆனால் பாக்கியா சொன்னதை ஈஸ்வரி நம்பாமல் இருக்கிறார். கோபி இப்படி எல்லாம் செய்யமாட்டான் என சொல்ல, ஈஸ்வரி நீ கற்பனை செய்து கொண்டு பேசாதே என சொல்கிறார். நான் இப்படி எல்லாம் நடக்காது என கற்பனையில் இருந்தேன் என சொல்ல, எழில் இவரை பற்றி எல்லாம் எனக்கு தெரியும் அம்மாவிற்கு இது தெரிந்தால் வருத்தப்படுவார் என்பதால் தான் நான் சொல்லாமல் இருந்தேன் என சொல்ல கோபி மாட்டிக் கொண்டதாக நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here