மருத்துவமனையில் வந்ததும் கோபியிடம் கேள்வி கேட்ட பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
மருத்துவமனையில் வந்ததும் கோபியிடம் கேள்வி கேட்ட பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய
மருத்துவமனையில் வந்ததும் கோபியிடம் கேள்வி கேட்ட பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
மருத்துவமனையில் வந்ததும் கோபியிடம் கேள்வி கேட்ட பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியா நின்ற இடத்தில் அப்படியே இருக்க அப்போது ஜெனி வந்து கோபிக்கு எதுவும் இல்லை என சொல்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் பேசாமல் அவர்களை போக சொல்கிறார். பின் கோபி வீட்டிற்கு வந்ததும் அவரிடம் கேள்வி கேட்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வீட்டிற்கு வந்து ராதிகாவை நினைத்து கொண்டே மாடியில் நிற்கிறார். அப்போது ஜெனி வந்து ஆன்டி ஏன் இப்படியே இருக்கீங்க என கேட்கிறார். ஆனால் பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்க ஜெனி ஆன்டி நாங்க இப்போ தான் மருத்துவமனையில் இருந்து வருகிறோம் அங்கிளிற்கு எதுவும் இல்லை. அவர் நன்றாக இருக்கிறார். பாட்டியும் எழிலும் கூட இருக்கிறார்கள் என சொல்கிறார். அப்போதும் பாக்கியா எதுவும் பேசாமல் இருக்க செல்வி அக்கா வந்ததில் இருந்து இப்படி தான் இருப்பதாக சொல்கிறார்.

ஜெனி என்னாச்சு ஆன்டி என கேட்க நீங்க இருவரும் சென்று தூங்குங்க என சொல்கிறார். பின் ஜெனி செல்வி கிளம்பி விட பாக்கியா அப்படியே நிற்கிறார். மறுபக்கம் மருத்துவமனையில் கோபி படுத்திருக்க ஈஸ்வரி அவரை பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது எழில் ராஜேஷ் பேசியதை நினைத்து கோபியை முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பின் கோபி எழுந்து பார்க்க இவன் எதற்கு என்னை இப்படி முறைக்கிறான் என நினைக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் எழில் அங்கிருந்து கிளம்பிவிடுகிறான். மறுநாள் காலையில் ஜெனி எழுந்து அடுப்படிக்கு செல்ல அங்கே செல்வி படுத்திருக்கிறார். என்ன அக்கா இங்கையே தூங்கி விட்டீர்கள் என கேட்க அக்கா வருவார் என நினைத்தேன் ஆனால் வரவில்லை என சொல்கிறார். பின் வெளியே சென்று பார்க்க வாசல் தெளிக்காமல் இருக்கிறது. அப்போது ஜெனி செல்வி பார்த்துவிட்டு மாடிக்கு சென்று பார்க்கின்றனர். அங்கே பாக்கியா இரவு முழுவதும் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கிறார். ஜெனி இரவெல்லாம் தூங்காமல் ஏன் இப்படி இருக்கீங்க ஆன்டி என கேட்க அங்கிள் இப்போது வந்துவிடுவார் என சொல்கிறார்.

அப்போது கார் சத்தம் கேட்க வண்டி வந்துவிட்டது என ஜெனி சொல்கிறார். அப்போது கோபியை அனைவரும் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வர ஈஸ்வரி ஆரத்தி எடுத்து கொண்டு வர சொல்கிறார். அப்போது பாக்கியா கீழே இறங்கி வர ஈஸ்வரி ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்கிறார். பாக்கியாவை பார்த்து எழில் அம்மா நான் போன் செய்தேன் என எடுக்கவில்லை என கேட்கிறார். பின் ஈஸ்வரியும் நீ மருத்துவமனைக்கு சென்றால் எங்களிடம் ஏன் சொல்லவில்லை அங்கே இருந்து கிளம்பும் போது கூட ஏன் போன் செய்யவில்லை என கேட்கிறார்.

ஆனால் பாக்கியா பதில் சொல்லாமல் கோபியை முறைத்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது கோபி பாக்கியா நீ மருத்துவமனைக்கு வந்தியா என கேட்க ஆமாம் அம்மா அங்கே இருந்து தான் வந்ததாக சொன்னதாக சொல்கிறார். பின் கோபியை பாக்கியா முறைத்து பார்த்துக் கொண்டிருக்க அப்போது ஈஸ்வரி என்ன பதில் சொல்லாமல் அவனையே பார்த்து கொண்டிருக்கிறாய் என கேட்கிறார்.பாக்கியா நேற்று யாரோ வந்து நம்ம வீட்டு வாசலில் சண்டை போட்டதாக சொன்னார்கள் அது யார் என கேட்கிறார்.

தமிழகத்தில் பேருந்துகளில் ‘இது’ கட்டாயம் – மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

ஈஸ்வரி உடனே இதை பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம் அவன் இப்போது தான மருத்துவமனையில் இருந்து வந்திருக்கிறான் என சொல்ல பாக்கியா நான் கேட்டதற்கு பதில் சொல்ல வேண்டும் என சொல்கிறார். ஈஸ்வரி பாக்கியாவிடம் நான் சொல்வது உனக்கு புரியவில்லையா என கேட்க பாக்கியா எனக்கு பதில் தெரிய வேண்டும் என தான் இவ்வளவு நேரம் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். ஈஸ்வரி கோபியை அமர சொல்ல ஆனால் பாக்கியா அவரை தடுக்கிறார்.

அப்போது எழில் அம்மா என கூப்பிட பாக்கியா கோவமாக நான் மருத்துவமனைக்கு வந்தது உங்களுக்கு தெரியாதா என கேட்கிறார். நீ மருத்துவமனைக்கு வந்தியா என கோபி கேட்க, செழியன் கோபி மனைவி தான் பில் எல்லாம் கட்டியதாக சொன்னார் என சொல்கிறார். பாக்கியா கோபியின் மனைவி என சொன்னார்கள் ஆனால் பாக்கியலட்சுமி என சொல்லவில்லை என சொல்கிறார். ஈஸ்வரி கோபி மனைவி வேற பாக்கியலட்சுமி வேறயா என கேட்க, அதை அவரிடம் கேளுங்கள் என சொல்கிறார். கோபி இவள் எதோ உண்மையை தெரிந்து கொண்டு தான் பேசுவதாக நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!