இனியாவின் பீஸ் கட்ட வந்த பாக்கியா, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
இனியாவின் பீஸ் கட்ட வந்த பாக்கியா, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி - இன்றைய
இனியாவின் பீஸ் கட்ட வந்த பாக்கியா, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
இனியாவின் பீஸ் கட்ட வந்த பாக்கியா, ராதிகாவிடம் கெஞ்சும் கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நகையை அடகு வைத்து பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு இனியா ஸ்கூலிற்கு கிளம்புகிறார். அங்கே கோபி ஏற்கனவே பீஸ் கட்டிவிட்டு வர ராதிகாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் ப்ரொடியூசர் பேசியதை நினைத்து டென்ஷனாக இருக்கிறார். அப்போது அமிர்தா வந்து டென்ஷன் ஆகாதீங்க அம்மா உங்களிடம் பேசுனாங்களா என கேட்க எழில் இல்லை என சொல்கிறார். நான் அம்மாவை சென்று பார்த்துவிட்டு வந்தேன், பார்க்கவே கஷ்டமாக இருந்ததாக சொல்ல, அம்மாவிற்கு அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை யோசிப்பதை விட இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கிறது என சொல்கிறார். நான் சென்று பார்க்கும் போது அப்படி தான் இருந்தாங்க என அமிர்தா சொல்ல, எழில் அம்மாவிற்கு இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் அது தான் முக்கியம் என சொல்கிறார்.

பின் அமிர்தா நீங்க உதவி செய்யலாமே என கேட்க, எழில் நான் கேட்டேன் ஆனால் அம்மா வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார். ஆமாம் இப்போ ப்ரொடியூசர் கோவமாக இருப்பதாக சொல்ல, அதான் அம்மாவிற்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என எழில் சொல்கிறார். பின் செல்வி நகையை அடகு வைத்து பணத்தை கொடுக்கிறார், பாக்கியா வேகமாக வாங்கி கொண்டு ஸ்கூலிற்கு கிளம்புகிறார். பின் எழிலிற்கு போன் செய்து பணம் கிடைத்துவிட்டது நான் கிளம்புகிறேன் என சொல்கிறார். எழில் எப்படி அம்மா என கேட்க அதெல்லாம் ஆண்டவன் எல்லாத்துக்கும் வழி செய்து கொடுத்திருப்பார் என சொல்கிறார்.

பின் எழில் எப்படி பணம் கிடைத்தது என கேட்க வீட்டிற்கு வா சொல்கிறேன் என சொல்கிறார். மறுபக்கம் கோபி இனியாவை பார்த்துவிட்டு வந்து கொண்டிருக்க அப்போது ராதிகாவின் கார் வருகிறது. ராதிகா வந்து இறங்க கோபி அவரை பார்த்து சந்தோசப்படுகிறார். ராதிகாவிடம் எப்படி இருக்க என கேட்க இருக்கோம் என சொல்கிறார். நீங்க என கேட்க இருக்கேன் இந்த நேரத்தில் நான் எப்படி இருப்பேன் என உனக்கு தெரியாத என கேட்கிறார். வாழ்க்கையில் 25 வருஷம் வேலை செய்து கொண்டிருக்கேன். ஆனால் இப்போது திரும்பி பார்க்கும் போது என்னுடைய வாழ்க்கையை நான் வாழவே இல்லை. நான் எல்லாருக்கும் சந்தோசத்தை கொடுத்து இருக்கேன்.

ஆனால் எனக்கு சந்தோசம் கொடுக்க யாருமே இல்லை ராதிகா, எனக்கு எது சந்தோசம் என தெரியவில்லை. ஆனால் நீ வந்த பின் என் வாழ்க்கையில் வெளிச்சம் நம்பிக்கை கிடைத்தது போல இருந்தது. ஆனால் நீயும் என்னை புரிந்து கொள்ளவில்லை என நினைத்த போது என் மனசு நொறுங்கிவிட்டது என சொல்கிறார். பின் கோபி என்ன விஷயமாக இங்கே வந்தாய் என கேட்க இப்போதைக்கு மும்பைக்கு போவது தள்ளி போய்விட்டது. அதனால் ஸ்கூல் அனுப்பலாமா என கேட்க வந்ததாக சொல்கிறார். பின் நீங்க எதற்கு வந்தீங்க என கேட்க இனியாவிற்கு பீஸ் கட்ட வந்தேன் என சொல்கிறார். நான் என் இனியாவை பார்க்காமல் கஷ்டப்படுகிறேன் இப்போது ஹோட்டலில் தங்கி இருப்பதாக சொல்கிறார்.

உனக்காக தான் எல்லாம் செய்தேன் வீட்டை விட்டு வந்தேன். ஆனால் இப்போ என் சொந்த ஊரில் எதுவும் இல்லாமல் இருக்கேன் என சொல்ல அந்த நேரம் பாக்கியா அங்கே வருகிறார். நான் செய்த எல்லாத்துக்கும் அர்த்தம் வேண்டும் யோசித்து சொல் நான் இனியாவை கூட்டிக் கொண்டு வருகிறேன் என சொல்கிறார். நன்றாக யோசித்து பாரு என கோபி சொல்கிறார். அப்போது பாக்கியா அந்த பக்கமாக இவர்களை பார்க்காமல் செல்கிறார். கோபி ராதிகாவிடம் ஒன்றும் அவசரம் இல்லை இப்போது வேலையை முடித்துவிட்டு வா என சொல்கிறார். பாக்கியா அலுவலகம் சென்று பீஸ் கட்ட பெயர் சொல்ல அவருக்கு ஏற்கனவே கோபி என்பவர் கட்டிவிட்டார் என சொல்கிறார்.

தமிழகத்தில் நாளை (ஆக.30) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

பின் பாக்கியா இனியாவை சந்திக்க செல்ல டாடி வந்து பணம் கட்டிவிட்டதாக இனியா சொல்கிறார். நான் உனக்காக காத்திருக்கிறேன் என பாக்கியா சொல்ல ஆனால் இனியா வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா அலுவலகம் சென்றுவிட்டு வர கோபி ராதிகாவின் கையை பிடித்து பேசுகிறார், உடனே ராதிகா கையை விடுங்க என சொல்லிவிட்டு நான் உங்களுடன் வாழ ஆசைப்பட்டேன் ஆனால் டீச்சர் தான் உங்க மனைவி என தெரிந்த பின் மனதை மாற்றிக் கொண்டேன் என சொல்கிறார். கோபி நடந்து முடிந்ததை விடு நாம இனி சேர்ந்து வாழலாம் என சொல்கிறார். என்னுடன் வாழ நினைக்கிறியா என கேட்க ராதிகா ஆமாம் என சொல்கிறார். கோபி அதை கேட்டு சந்தோசப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!