இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
இனியாவின் ஸ்கூல் பீஸ் கட்ட பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு தாத்தா பணம் கொடுத்து உதவி செய்ய சொல்ல ஆனால் பாக்கியா என்னிடம் பணம் இருப்பதாக சொல்கிறார். மறுபக்கம் ராதிகா கோபி ஹோட்டலில் தங்குவதை பார்த்து வருத்தப்படுகிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்ட வேண்டும் என சொல்ல பாக்கியாவிற்கு தாத்தா பணம் கொடுக்கிறேன் என சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி அவள் கஷ்டப்பட வேண்டும் அப்போது தான் பணம் எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வரும் என சொல்கிறார். பின் தாத்தா ஈஸ்வரி நீ சும்மா இரு பாக்கியா நீ உடனே என்னுடன் வா என சொல்ல, ஆனால் பாக்கியா நீங்க சொல்வதே எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது என பாக்கியா சொல்கிறார். தாத்தா சரி மா உன் இஷ்டம் என சொல்கிறார். ஈஸ்வரி இதெல்லாம் உனக்கு தேவையா கோபி உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்கானா என கேட்கிறார்

மறுபக்கம் எழில் பாக்கியாவை பார்க்க அலுவலகத்திற்கு வருகிறார். அவரிடம் இனியா என்ன சொன்னாள் என கேட்க அப்பா இருந்தால் இந்த நிலைமை வந்துருக்காது என சொல்லி கொண்டே வந்ததாக சொல்ல, இனியா சொல்லாமல் விட்டுவிட்டு உன்னை குறை சொல்வதாக சொல்ல, நான் இனியாவை பற்றி நினைத்திருக்க வேண்டும் என சொல்கிறார். பின் எழில் உன் மீது தவறு இல்லை என சொல்ல, பின் பணம் சரியாக இருக்கிறதா என கேட்கிறார். பாக்கியா பணம் போதவில்லை என சொல்ல, செல்வி ஸ்கூலிற்கு பணம் கட்டவே நிறைய சம்பாரிக்க வேண்டியதாக இருக்கும் போல என கேட்கிறார்

பின் எழிலிடம் பாக்கியா குடும்ப செலவிற்கு காசு வாங்க கூடாது சம்பளம் தனி என சொல்ல எழில் அதெல்லாம் சம்பளத்தில் கழித்து கொள்ள சொல்லலாம் என சொல்கிறார். உடனே பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் எழில் சரி நான் கேட்கவில்லை என சொல்கிறார். யார் எப்படி என நம்மளால் சொல்ல முடியாது. ஒரு பெரிய விஷயம் செய்பவரிடம் சின்ன விஷயத்தை கேட்டு நம்ம பெயரை கெடுக்க கூடாது என சொல்கிறார். செல்வி நமக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களிடம் பணம் கேட்கலாம் என சொல்ல, கஸ்டமரிடம் நெருக்கடி கொடுக்க முடியாது நம்ம தொழில் பாதிக்கப்படும் என பாக்கியா சொல்கிறார். அப்போ பணத்திற்கு என்ன செய்ய போகிறாய் என எழில் கேட்க பார்த்துக் கொள்ளலாம் என பாக்கியா சொல்கிறார்

செல்வி இப்படி தான் அடிக்கடி சொல்வதாக சொல்ல, சரி பாரு நானும் முயற்சி செய்கிறேன் என எழில் சொல்கிறார். மறுபக்கம் கோபி காரில் இருந்து இறங்கி செல்வதை ராதிகா பார்க்க அவர் நேராக ஹோட்டலிற்கு செல்கிறார். ராதிகா அதை பார்த்து வருத்தப்படுகிறார். ஹோட்டல் வரவேற்ப்பு அறையில் கோபியை பற்றி கேட்க அவர் இங்கே தான் தங்கி இருப்பதாக அவர் சொல்கிறார். உடனே ராதிகா கோபி பாவம் என நினைக்கிறார். சொந்த ஊரில் இப்படி ஹோட்டலில் தங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என சொல்கிறார். அவரை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது என நினைத்து அழுகிறார்.

NEET UG 2022 தேர்விற்கான முடிவினை அறிந்துகொள்வது எப்படி? முழு விவரங்கள் இதோ!

பின் செழியன் அலுவலகத்தில் இருந்து வர ஜெனி கோவமாக இருக்கிறார். என்ன விஷயம் என செழியன் கேட்க, ஸ்கூல் பீஸ் இனியாவிற்கு ஏன் கட்டவில்லை என ஜெனி கேட்கிறார். இல்லை நான் ஏன் கட்ட வேண்டும் என செழியன் கேட்க, புரியவில்லை என ஜெனி சொல்கிறார். நானா அப்பாவை வெளியே போக சொன்னேன் நான் ஏன் கட்ட வேண்டும் என கேட்க, இது இனியாவின் வாழ்க்கை பிரச்சனை இதை ஏன் சம்மந்தப்படுத்துவாய் என கேட்கிறார். இது போல எதாவது மாட்டி விட்டால் தான் அம்மாவிற்கு அப்பாவின் அருமை தெரியும் என சொல்ல, இனியா உன் தங்கச்சி தான அவளுக்கு செய்வது என்ன என ஜெனி கேட்க, செழியன் அப்பாவிடம் எல்லாம் பார்த்துக் கொள்வேன் என சொன்னாங்க தான இப்போ அவங்களே பார்க்கட்டும் என சொல்ல, உன்னை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது என ஜெனி சொல்கிறார்.

பின் செழியன் அப்பா இறங்கி வந்தும் விவாகரத்து கொடுத்தாங்க அதனால் இதையும் அவங்களே சமாளிக்கட்டும் என செழியன் சொல்கிறார். ஆன்டி பக்கத்தில் இருந்து யோசிக்கமாட்டியா என கேட்க, அதெல்லாம் முன்னாள் யோசித்தேன் இப்போது அதை பற்றி நான் யோசிக்கமாட்டேன் என சொல்ல , அப்போ இனியாவிற்கு நீ உதவி செய்யமாட்டியா என கேட்க, நான் செய்வேன் ஆனால் இந்த விஷயத்தில் செய்யமாட்டேன் என சொல்கிறார். படிப்பு தான் முக்கியம் என சொல்ல செழியன் நீ சும்மா இரு என சொல்கிறார். பின் ராதிகா வீட்டிற்கு வர அலுவலகத்தில் மும்பை போக ஒப்புக் கொண்டு பேர் கெட்டுபோய்விட்டது என சொல்கிறார்.

எல்லாம் வீணாகிவிட்டது மயூராவிற்கு ஸ்கூலும் போய்விட்டது என சொல்ல, சந்துரு உண்மையாகவே நீ இந்த திட்டத்தை நிறுத்திவிட்டியா என கேட்க ராதிகா யோசித்து கொண்டிருப்பதாக சொல்கிறார். அப்போ மயூராவை அதே ஸ்கூலில் சேர்ந்துவிடலாம் என சொல்ல, மயூரா மிகவும் சந்தோசப்படுகிறாள். ராதிகா ஆமாம் என சொல்ல, பார்த்தீங்களா அம்மா எவ்வளவு சந்தோசம் என கேட்கிறார் ராதிகா, சந்துரு என்ன யோசிக்கிறாய் என கேட்க, கோபியை பார்த்ததாக ராதிகா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here