அமிர்தாவிடம் அம்மா அப்பா விவாகரத்து பற்றி சொன்ன எழில், ராதிகா வீட்டில் சண்டை போடும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

0
அமிர்தாவிடம் அம்மா அப்பா விவாகரத்து பற்றி சொன்ன எழில், ராதிகா வீட்டில் சண்டை போடும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
அமிர்தாவிடம் அம்மா அப்பா விவாகரத்து பற்றி சொன்ன எழில், ராதிகா வீட்டில் சண்டை போடும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
அமிர்தாவிடம் அம்மா அப்பா விவாகரத்து பற்றி சொன்ன எழில், ராதிகா வீட்டில் சண்டை போடும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் அலுவலகம் கிளம்பும் போது பாக்கியா சாப்பிட்டு விட்டு கிளம்ப சொல்கிறார். ஆனால் செழியன் வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் எழில் அமிர்தாவிடம் விவாகரத்து பற்றி சொல்கிறார். பின் ஈஸ்வரி கோபியை தேடி ராதிகா வீட்டிற்கு சென்று சண்டையிடுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் அலுவலகம் கிளம்பிவிட்டதாக ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது பாக்கியா வந்து சாப்பிட்டு போக சொல்ல, ஆனால் செழியன் ஏன் அதற்கும் என்னை குத்தி காட்டி பேசுவாய் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என சொல்கிறார். பின் தாத்தா ஏன் இப்படி எல்லாம் பேசுகிறாய் என சத்தம் போட எனக்கு சாப்பாடு வேண்டாம் என செழியன் சொல்கிறார். என்ன காரணம் என கேட்க இப்போ சாப்பிட சொல்லிவிட்டு நான் எல்லாம் செய்தேன் என சொல்வதற்கா என செழியன் கேட்க உடனே கோவப்பட்ட தாத்தா என்ன பேசுகிறாய் நீ என கேட்கிறார்.

நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லை என்றால் போ என தாத்தா சொல்ல, ஆன்டி அங்கிள் பிரச்சனை வேற நீ பேசுவது வேற என ஜெனி சொல்கிறார். பின் செழியன் சாப்பிடாமல் கிளம்புகிறார். பின் இனியா வந்து ஸ்கூலிற்கு நேரமாகிவிட்டது என ஜெனியை தலை சீவிவிட சொல்கிறார். ஆனால் பாக்கியா ஜெனியை சாப்பாடு போட சொல்லிவிட்டு இனியாவிற்கு தலை சீவ செல்கிறார். நீ எதுவும் எனக்கு செய்ய வேண்டாம் அம்மா என இனியா கோவமாக பேசிவிட்டு மாடிக்கு கிளம்ப ஜெனி பின்னால் செல்கிறார். பின் ஈஸ்வரி எப்படி இருந்த பெண் அம்மா அம்மா என அழுது கொண்டே இருந்தவள் இப்படி ஆகிவிட்டாள், இந்த குடும்பம் இப்படி இருக்க நீ தான் காரணம் என சொல்ல பாக்கியா அதை நினைத்து வருத்தப்படுகிறார்.

பாக்கியாவிற்கு எழில் ஆறுதல் சொல்கிறார். பின் தாத்தா ஈஸ்வரியிடம் நீ நினைத்தது போல நடந்துவிட்டது என சொல்கிறார். என்ன சொல்றீங்க என கேட்க நீ கோபி இங்கே சண்டை போட்டு நேராக ராதிகா வீட்டிற்கு தான் போவான் என சொன்னாய் அது போலவே நேற்று அங்கே இருந்து வெளியே வருவதை நான் பார்த்தேன் என சொல்கிறார். அவனை அப்படியே அடித்திருக்கலாமே என ஈஸ்வரி சொல்ல, எல்லாத்துக்கும் பாக்கியா தான் காரணம் பிரச்சனை என்றால் வீட்டில் வைத்து பேசி முடித்திருக்க வேண்டும் என சொல்கிறார்.

அந்த ராதிகாவிடம் கேள்வி கேட்டு இருக்கலாமே என சொல்ல, நான் எல்லாம் கேட்டேன் என தாத்தா சொல்கிறார். அவளால் தான் குடும்பத்தில் இவ்வளவு பிரச்சனை என ஈஸ்வரி சொல்கிறார். விவாகரத்து செய்ய சொன்னது கூட அவளுடைய திட்டமாக தான் இருக்கும் என ஈஸ்வரி சொல்ல, நன்றாக யோசித்து பாருங்கள் அவளுக்கு ஆசை இருந்தால் கல்யாணம் ஆகாத ஒருவனை திருமணம் செய்ய வேண்டும். இதை இப்படியே விட கூடாது கோபி இனிமேல் அங்கே போக கூடாது என ஈஸ்வரி சொல்கிறார்.

மறுபக்கம் அமிர்தா குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்க எழில் வருகிறார். நிலா பாப்பாவை கொஞ்ச அவளை பார்க்க இப்போ தான் தோணுச்சா என அமிர்தாவின் அம்மா கேட்கிறார். உடனே அமிர்தாவின் அப்பா அவனுக்கு சினிமா வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும் என சொல்கிறார். பின் அமிர்தாவின் அம்மா இந்த பக்கம் வேலையாக வரும் போது கூட வர கூடாதா என கேட்கிறார். வேலையாக இருந்ததாக சொல்ல, வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க என அமிர்தாவின் அம்மா கேட்கிறார். எல்லாரும் நன்றாக இருப்பதாக சொல்ல அமிர்தா எழில் பேச்சில் ஏதோ தடுமாற்றம் இருப்பதாக நினைக்கிறார். பின் எழில் கிளம்பிவிட வெளியே சென்று அமிர்தா ஏன் சோகமாக இருக்கீங்க என கேட்கிறார்

மின்சார மானியத்தை தேர்வு செய்ய புதிய வழிமுறை – டெல்லி அரசு அறிவிப்பு!

அப்போது எழில் அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டதாக சொல்ல, நீ சொல்வது புரியவில்லை என அமிர்தா கேட்கிறார். அம்மா அப்பாவிற்கு விவாகரத்து ஆகிவிட்டது என எழில் சொல்ல அமிர்தா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அம்மாவை இனி நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதான் என் மனதில் இருப்பதாக சொல்ல, அமிர்தா நான் அம்மாவை பார்க்க வேண்டும் என கேட்கிறார். ஆனால் எழில் இப்போதைக்கு நிலைமை சரியில்லை என சொல்கிறார். சரி அம்மாவை கூடவே இருந்து பார்த்துக் கொள்ளுங்கள் என அமிர்தா சொல்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு வருகிறார். அவர் ராதிகாவிடம் என் புள்ளை எங்கே என கேட்க, ஒழுங்காக உண்மையை சொல்லு இல்லையென்றால் வேற மாதிரி ஆகிவிடும் என சொல்கிறார். ராதிகாவின் அம்மா இவர்களுக்கு இதே வேலையாக இருப்பதாக சொல்ல, என் மகனை மறைத்து வைத்து கொண்டு நாடகம் ஆடாதீங்க என சொல்கிறார் ஈஸ்வரி. எங்களுக்கு வேற வேலையே இல்லையா என ராதிகாவின் அம்மா சொல்ல, உங்களுக்கு வேற வேலை இல்லாததால் தான் என் மகனை மறைத்து வைத்து கொண்டு பொய் சொல்றீங்களா என கேட்கிறார். பின் என் மகன் இங்கே தான நேராக வந்திருப்பான் என ஈஸ்வரி சொல்ல, அனாவசியமாக இங்கே வந்து கத்தாதீங்க என சொல்கிறார். ஒரு குடும்பத்தை தரைமட்டமாக மாற்றிவிட்டு வாழலாம் என நினைக்காதே என ஈஸ்வரி சொல்ல, நான் எந்த குடும்பத்தையும் தரைமட்டமாக ஆக்கவில்லை என ராதிகா சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!