பணத்தை கொடுக்க முடிவு செய்யும் பாக்கியா, கோபத்துடன் வெளியேறிய கோபி – இன்றைய எபிசோட்!

0
பணத்தை கொடுக்க முடிவு செய்யும் பாக்கியா, கோபத்துடன் வெளியேறிய கோபி - இன்றைய எபிசோட்!
பணத்தை கொடுக்க முடிவு செய்யும் பாக்கியா, கோபத்துடன் வெளியேறிய கோபி - இன்றைய எபிசோட்!
பணத்தை கொடுக்க முடிவு செய்யும் பாக்கியா, கோபத்துடன் வெளியேறிய கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன், ஆனால் எனக்கு 40 லட்சம் வேண்டும் என சொல்ல, உடனே பாக்கியா பணத்தை கொடுக்க சம்மதிக்கிறார். பின் எப்போ கொடுப்பாய் என கேட்க இன்னும் 1 வருடத்தில் கொடுக்கிறேன் என சொல்ல, கோபி கோவமாக வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி பாக்கியாவிடம் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் ஆனால் நான் இந்த வீட்டிற்காக செலவு செய்த 40 லட்சத்தை கொடு என சொல்ல, பாக்கியா நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். உடனே கோபி நக்கலாக இது 4000, 40000 ரூபாய் இல்லை என சொல்ல, பாக்கியா நானே சம்பாரித்து கொடுக்கிறேன் என சொல்கிறார். உன் தலையை அடமானம் வைத்தால் கூட அந்த பணம் கிடைக்காது என கோபி சொல்ல பாக்கியா உங்களுக்கு பணம் தான வேண்டும் நான் கொடுக்கிறேன் என சொல்கிறார். எப்போ கொடுப்பாய் என கோபி கேட்க இன்னும் 1 வருடத்தில் பணத்தை கொடுக்கிறேன் என சொல்கிறார்.

ஈஸ்வரி நிறுத்துங்க எல்லாரும் என்னமோ பெட்டி கடையில் பேரம் பேசுவது போல பேசுகிறீர்கள் என கேட்க, பாக்கியா அவர் தான் பணம் கேட்பதாக சொல்கிறார். அவன் ஏதோ கோவத்தில் பேசுவதாக ஈஸ்வரி சொல்ல, அவர் கோவத்தில் பேசவில்லை தெளிவாக பணம் கொடுப்பதாக சொல்கிறார். சரி பணம் எப்போ கொடுப்பாய் என கேட்க ஒரு வருஷத்தில் நான் பணம் கொடுக்கவில்லை என்றால் அப்பறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என சொல்கிறார். ஈஸ்வரி, பாக்கியாவிடம் வேண்டாம் அவனை கோவப்படுத்தி வெளியே அனுப்பாதே என சொல்ல, நான் என்ன தப்பு செய்தேன் அத்தை என கேட்க, செழியன் தப்பு தான் அம்மா நீ செய்வது என சொல்கிறார்.

பின் பாக்கியா நான் எதுவும் தப்பாக பேசவில்லை என சொல்கிறார். அவங்க எல்லாம் செய்வாங்க? நான் பொறுமையாக அமைதியாக இருக்க வேண்டுமா? உனக்கும் உன் அப்பாவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என பாக்கியா சொல்கிறார். ஓகே சரி நானும் பார்க்க தான போறேன் சம்பாரிக்க எவ்வளவு கஷ்டம் என சம்பாரித்தால் தான் தெரியும் மாசம் பிறந்தால் எவ்வளவு பணம் தேவைப்படும் அதெல்லாம் கஷ்டப்பட்டால் தான் தெரியும் இதற்கு மேல் நான் பேசமாட்டேன் பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு சொல்லு என கோபி சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் ஈஸ்வரி, இனியா, செழியன் வந்து கோபியை தடுத்து நிறுத்துகிறார்கள்.

இனியா இவ்வளவு நேரம் அம்மா தான் இருக்கமாட்டாங்க என நினைத்தேன் இப்போது நீங்க போறீங்க என சொல்கிறார். பின் செழியனும் தடுத்து நிறுத்த, ஆனால் கோபி கேட்காமல் காரில் கிளம்புகிறார். பின் செழியன் வீட்டிற்குள் வந்து இப்போ சந்தோசமா கடைசியில் நீ நினைத்தது தான் நடந்திருக்கு என சொல்கிறார். நீ ஆசைப்பட்டது போலவே அப்பா சென்றுவிட்டார், இப்போது நீ சந்தோசமாக இரு என செழியன் சொல்ல, தாத்தா செழியனை எதுவும் பேச கூடாது என சொல்கிறார். யாரும் இனிமேல் இதை பற்றி பேச கூடாது என சொல்கிறார். பின் ஈஸ்வரி இப்படி யாரும் பேச கூடாது என சொன்னால் அவள் செய்தது சரியாகாது இந்த குடும்பம் உடைய கூடாது என நான் நினைத்தேன் ஆனால் நீ இந்த குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என சொல்ல, எழில் எப்படி அம்மாவிற்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல பேசுறீங்க? என கேட்கிறார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 க்கான ஊக்கத்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கோபியை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாய், உன்னை நான் மன்னிக்கவும் மாட்டேன், உன்னுடன் நான் பேசவே மாட்டேன் என ஈஸ்வரி சொல்கிறார். பின் இனியாவும் டாடி இல்லாமல் கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். நீ என்னை அழ வைத்து கொண்டே இருக்கிறாய், எனக்கு உன்னை பிடிக்கவில்லை என இனியா சொல்கிறார். பின் கோபி காரில் அமர்ந்து நடந்ததை பற்றி நினைத்து கோபப்படுகிறார். எவ்வளவு திமிரு என சத்தம் போட்டு கத்துகிறார். அப்போது கோபியின் நண்பர் வருகிறார் என்ன பிரச்சனை என கேட்க. அவள் என் கதையை முடித்துவிட்டால் என சொல்கிறார். அந்த பாக்கியலட்சுமி திட்டமிட்டு என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாள் என சொல்கிறார். இதெல்லாம் நீ எதிர் பார்த்து இருக்க வேண்டும் என கோபியின் நண்பர் சொல்ல, நீ ராதிகாவிடம் பேசுனியா என கோபியின் நண்பர் கேட்கிறார். இல்லை என கோபி சொல்ல, கோவமாக இருக்கும் போது எது தவறு எது சரி என தெரியாது நீ பொறுமையாக முடிவு எடு என கோபியின் நண்பர் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!