எழிலுடன் கோர்ட்டிற்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு சாபம் கொடுத்த ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழிலுடன் கோர்ட்டிற்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு சாபம் கொடுத்த ஈஸ்வரி - இன்றைய
எழிலுடன் கோர்ட்டிற்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு சாபம் கொடுத்த ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
எழிலுடன் கோர்ட்டிற்கு வந்த பாக்கியா, ராதிகாவிற்கு சாபம் கொடுத்த ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவும் எழிலும் கோர்ட்டிற்கு வருகின்றனர். மறுபக்கம் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு சென்று பயங்கரமாக திட்டுகிறார். மயூராவிற்கும் ராதிகாவிற்கும் பயங்கரமாக சாபங்களை கொடுக்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் எழிலும் கோர்ட்டிற்கு வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றம் என பலகையை பார்த்து பாக்கியா வருத்தப்படுகிறார். என்னம்மா இப்படி பார்க்கிறாய் என எழில் கேட்க அப்பா கண்டிப்பாக வருவாரா என எழில் கேட்கிறார். அவர் கண்டிப்பாக வருவார் என பாக்கியா சொல்கிறார். பின் வக்கீல் வந்து காத்திருங்கள் என சொல்கிறார். இவர் யாரு என எழிலை கேட்க உங்க வீட்டுக்காரர் எங்கே என வக்கீல் கேட்கிறார். வந்துருவாரு என சொல்ல, எழில் எப்படி அப்பா வருவார் என நம்பிக்கை உடன் இருக்கிறாய் என கேட்க, நான் வீட்டில் பேசிவிட்டு வந்தேன்ல அதனால் உனக்கே இவ்வளவு திமிரு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என நினைத்து வருவார் என சொல்கிறார்.

பின் பாக்கியாவும் எழிலும் கோர்ட்டில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஈஸ்வரி, ராதிகா வீட்டிற்கு வருகிறார். அவர் கோவமாக உள்ளே வர ராதிகா எங்கே என கேட்கிறார். சந்துரு யாரு நீங்க என கேட்க, ராதிகாவின் அம்மா இவங்க பாக்கியாவின் மாமியார் என சொல்கிறார். நீங்க எதற்கு இங்கே வந்தீங்க என ராதிகாவின் அம்மா கேட்க, ராதிகா எங்கே என சத்தமாக ஈஸ்வரி கேட்கிறார். அப்போது ராதிகா உள்ளே இருந்து வந்து வாங்க அம்மா என சொல்ல, ஈஸ்வரி என்னை அம்மா என கூப்பிடாதே என சொல்கிறார். எதற்காக பாக்கியாவிற்கு இப்படி ஒரு துரோகம் செய்தாய் என கேட்க, என்ன எல்லாரும் என் மகளை கேள்வி கேக்குறீங்க என ராதிகாவின் அம்மா கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

உடனே ஈஸ்வரி நீ வாய்யை மூடு நீயெல்லாம் ஒரு அம்மாவா என கேட்கிறார். பாக்கியா வீட்டிற்கு உன்னை கூட்டிக் கொண்டு வரும் போது நீ சரியில்லை என சொன்னேன். அவ புருஷனை கல்யாணம் செய்ய தான் பணம் கொடுத்தியா என கேட்க, செல்வி அந்த பணத்தை திருப்பி கொடுத்தாச்சு என சொல்கிறார். அவ வாழ்க்கையை கெடுக்க தான் அவளுடன் பழகி வந்தியா என கேட்கிறார். உன் வீட்டு பால் காய்ச்சுவதற்கு நாங்க எல்லாரும் எப்படி வந்தோம். இனியா, ஜெனி, எழில் என எல்லாரும் உன் மீது எவ்வளவு பாசமாக இருந்தார்கள் என கேட்கிறார். கோபி உடன் சண்டை போட்டு நீ கவலையாக இருந்தாய் அப்போது பாக்கியா எவ்வளவு கவலைபட்டாள், அவளுக்கு போய் துரோகம் செய்தாயே பாவி என ஈஸ்வரி சொல்கிறார்.

ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் பேசாமல் இருக்க சொல்ல, கல்யாணம் ஆன ஒருவனுடன் உங்க பொண்ணு பழகினாள் நீங்க தான் அறிவுரை சொல்ல வேண்டும். அங்கே விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது, என் குடும்பமே சிதறி கிடக்கிறது. ஒரு ஆள் இங்கே வந்து தங்குவதை தடுக்க முடியவில்லை நீ என் வாயை மூட சொல்கிறாய் என சொல்கிறார். கோபி மனதை ஏமாற்றி எங்க குடும்பத்தை இப்படி அளித்துவிட்டாய் என சொல்கிறார். உன் பெண்ணை எங்க வீட்டு பெண் போல எப்படி பார்த்துக் கொண்டோம். அன்னைக்கு நீ உன் பொண்ணை தனியாக விட்டு சென்றுவிட்டாய் என்பதால் அவளுக்கு துணையாக பாக்கியா இருந்தாள், அவள் அருகே உன்னால் நிற்க முடியுமா என ஈஸ்வரி கேட்கிறார்.

உங்க வீட்டில் இருந்து ஒவ்வொருவராக என் மகளை திட்டுவீங்க நாங்க சும்மா இருக்க வேண்டுமா என ராதிகாவின் அம்மா கேட்க, பாக்கியா அக்கா இப்படி எல்லாம் பேசவில்லை என செல்வி சொல்கிறார். உன் முகத்தில் முழிக்கவே அசிங்கமாக இருப்பதாக ஈஸ்வரி சொல்லிவிட்டு வெளியே கிளம்ப ராதிகா பின்னாடியே செல்கிறார். நீங்க புரியாமல் செய்கிறீர்கள் நான் வேண்டும் என்றே எதுவும் செய்யவில்லை என ராதிகா சொல்ல, ராதிகாவின் அம்மா நீ எதற்கு விளக்கம் கொடுத்து கொண்டிருக்கிறாய் அவங்க போகட்டும் என சொல்கிறார். ஈஸ்வரி இது ஒரு பொண்ணோட வாழ்க்கை நீ எல்லாம் திட்டமிட்டு தான் செய்திருக்கிறாய் என சொல்கிறார்.

தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – கல்வி இயக்குனர் வெளியிட்ட செயல்முறைகள்!

அவள் உன்னை எந்த அளவிற்கு நேசித்தாளோ அந்த அளவிற்கு நீ அவளுக்கு துரோகம் செய்திருக்கிறாய். எங்க குடும்பத்தை விட்டுவிட்டு உன்னை அவனால் கல்யாணம் செய்ய முடியாது என் குடும்பம் அழுவது போல 100 மடங்கு நீ அழுவாய் என சொல்ல, ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் பேசாதே என சொல்கிறார். அப்போது மயூரா வந்து சண்டை போடாதீங்க என சொல்ல, ஆனால் ஈஸ்வரி நீங்க விஷ பாம்பு என தெரியாமல் வீட்டிற்குள் விட்டு என் குடும்பமே கஷ்டத்தில் இருக்கிறது என சொல்கிறார். ராதிகா இப்பவும் சொல்கிறேன் பாக்கியாவின் கண்ணீரை விட 1000 மடங்கு கண்ணீர் வரும் என சொல்கிறார். என்பேத்தி அவ்வளவு அழுகிறாள் அதை விட 1000 மடங்கு உன் மகள் அழுவாள் என  சொல்லிவிட்டு மண்ணை அள்ளி போட்டு சாபம் கொடுக்கிறார்.

வாசலில் நின்று மத்தவங்க குடியை கெடுத்துவிட்டு நல்ல இருப்பியா நாசமாக போவாய் என ஈஸ்வரி சொல்கிறார். இன்னொரு பெண்ணை அழ வைத்து அவ புருசனுடன் வாழ நினைத்தால் நீ நன்றாக இருப்பாயா நீ ஒன்றும் இல்லாமல் போய்விடுவாய் என ஈஸ்வரி சொல்கிறார். நல்லவள் போல நடித்து ஏமாற்றினாய் நீ நன்றாக இருக்கமாட்டாய் என ஈஸ்வரி சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா உள்ளே வர சொல்கிறார். மயூரா, பாட்டி ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனக்கு பயமாக இருப்பதாக சொல்கிறார். இதெல்லாம் உனக்கு தேவையா ராதிகா நீ பேசாமல் அவரை கல்யாணம் செய்து கொள், அந்த குடும்பத்திற்கு நீ நல்லது நினைத்தாய், ஆனால் நீ அவர்கள் மீது கருணை காட்டுகிறாய் என சொல்கிறார். இப்போ எல்லாம் போய்விட்டது என்னால் தாங்க முடியவில்லை என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here