விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

0
விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி - இன்றைய எபிசோட்!
விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கும் பாக்கியா, ராதிகா வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா கோபியை விவாகரத்து செய்வதில் பிடிவாதமாக இருக்கிறார். செழியன் ஜெனி பாக்கியாவின் இந்த முடிவை நினைத்து வருத்தமாக இருக்கின்றனர். பின் ஈஸ்வரி ராமமூர்த்தி சொல்வதை கேட்காமல் ராதிகாவை சந்திக்க செல்கிறார்

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி செழியனும் பாக்கியா தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருப்பதை நினைத்து வருத்தப்படுகின்றனர். அம்மா அப்பா இருவரும் கோவமாக கிளம்பி போறாங்க இருவரும் கண்டிப்பாக விவாகரத்து வாங்கிவிட்டால் என்ன செய்வது என செழியன் சொல்ல, நம்ம வீட்டில் இப்படி எல்லாம் நடக்கும் என நான் நினைக்கவே இல்லை என ஜெனி சொல்கிறார். அந்த எழில் வேற அம்மாவுடன் இருந்து அவரை ஏற்றி விடுகிறார் என செழியன் சொல்ல, ஆண்டிக்கு இப்படி நடந்தது என்பது எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத ஒன்று என செழியன் சொல்கிறார்

பின் ஜெனி நான் இந்த வீட்டிற்கு வந்தது முதல் அங்கிள் ஆண்டிக்கு இடையே ஒரு இடைவெளி இருந்தது. அது எல்லாருக்கும் இருப்பது போல என நான் நினைத்தேன் ஆனால் இருவருக்கும் இடையே பெரிய பாறை வந்திருக்கு, அதை யாரும் கண்டுபிடித்து தொடக்கத்தில் இருந்தே தடுக்காமல் போய்விட்டது என சொல்கிறார். பின் செழியன் எனக்கு பதட்டமாக இருப்பதாக சொல்ல, ஜெனியிடம் இது பற்றி உங்க வீட்டில் சொல்ல வேண்டாம் என சொல்கிறார். மறுபக்கம் எழில் வண்டியில் கூட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்க பாக்கியலட்சுமி என கூப்பிடுகிறார்.

TN Job “FB  Group” Join Now

என்னடா என பாக்கியா கேட்க, எழில் அப்பா இவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறார். இத்தனை நாள் அதை மறைத்து இருக்கிறார். உண்மையாகவே உனக்கு பயம் இல்லையா என கேட்க, பாக்கியா இத்தனை நாள் கல்யாண வாழ்க்கையில் எந்த முடிவும் நான் எடுத்தது இல்லை, இப்போது முதல் தடவை முடிவு எடுத்து இருக்கேன் சுயமரியாதை தான் முக்கியம் என வரும் போது புது வெளிச்சம் கிடைப்பதாக சொல்கிறார். விவாகரத்து வாங்கினால் எல்லாரும் என்னை எப்படி பார்ப்பார்கள் என எனக்கு தெரியும் அதனால் எனக்கு கவலை இல்லை என பாக்கியா சொல்கிறார்

மறுபக்கம் இனியா அழுது கொண்டிருக்கிறார். பாக்கியாவிடம் இவ்வளவு கெஞ்சியும் அவர் கேட்காமல் போனதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் ஜெனி வந்து பார்க்க இனியா அழுது கொண்டிருக்கிறார். அப்போது ஜெனி அழாதே எல்லாம் சரியாகிவிடும் என நினைக்க, அப்பாவை பாருங்கள் நம்மளுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அம்மா அப்படி இல்லை என சொல்ல இனியா வருத்தப்படுகிறார். எல்லாம் சரியாகிவிடும் என செழியன் சொல்ல, என் ஸ்கூலில் அம்மா அப்பா இல்லாமல் பசங்க இருகாங்க இனி நானும் அப்படி தான் இருக்க போறேன் என இனியா சொல்கிறார்.

அப்பா அம்மா இருவரும் விவாகரத்து வாங்க கிளம்பிட்டாங்க இதில் எப்படி எல்லாம் நடக்காது என நீ சொல்கிறாய். இருவரும் ஏன் நம்மை பற்றி நினைக்கவில்லை, நீங்க பெரியவர்கள் ஆனால் நான் இப்போது தான் பள்ளி படிக்கிறேன் என இனியா சொல்லி வருத்தப்படுகிறார். ஜெனி ஆண்டிக்கு உன் மீது பாசம் இருக்கிறது அதனால் வந்துவிடுவார்கள் என சொல்லி தைரியம் சொல்கிறார். பின் கோபி கோர்ட்டிற்கு செல்லும் போது பாக்கியா பேசியதை நினைத்து கோவப்படுகிறார்.

நான் விவாகரத்து வாங்க எவ்வளவு யோசித்து இருப்பேன், ஆனால் நீ 2 நாளில் எனக்கு விவாகரத்து கொடுக்க போறியா, சரி நீயா நானா என பார்த்துவிடுவோம் என நினைத்து கொண்டே வருகிறார். இந்த வீட்டிற்கு ஒரு அப்பாவாக மகனாக எல்லாம் செய்து இருக்கேன் அதை எல்லாம் நினைக்காமல் நான் செய்த தவறை மட்டும் வைத்து விவாகரத்து கேட்கிறாய், வரேன் வந்து தருகிறேன் என கோபி சொல்கிறார். பின் ஈஸ்வரி இத்தனை நாள் பொறுமையாக இருந்த பாக்கியா இப்போது ஏன் இப்படி செய்கிறாள் என கேட்க, தாத்தா உன் மகன் தான் இதற்கெல்லாம் காரணம் என சொல்கிறார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அவன் தான் எல்லாம் செய்தான் என சொல்ல அதற்காக இவனும் விவாகரத்து வாங்க கிளம்பிவிடுவாளா என ஈஸ்வரி கேட்கிறார். கோபி செய்தது தவறு தான் ஆனால் அதற்காக பாக்கியா செய்தது சரி என நான் சொல்லமாட்டேன் என ஈஸ்வரி சொல்கிறார். இத்தனை நாள் குடும்பமே தூக்கி வைத்து கொண்டாடினோம் அந்த ஆணவம் என சொல்ல, செல்வி அப்போது காபி கொண்டு வருகிறார். அவர் நான் சொல்வதை தவறாக நினைக்காதீங்க எங்கையாவது கட்டிய பொண்டாட்டியை விவாகரத்து வாங்க கூட்டிக் கொண்டு போவார்களா, தங்கச்சி மாதிரி வந்த பெண்ணுடன் பழகுவார்களா என கேட்க, தாத்தா அவரை சும்மா இருக்க சொல்கிறார்.

பாக்கியா அக்கா எவ்வளவு பொறுமையாக இருப்பார் அவங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்தால் எப்படி இருக்கும்,இதே காரியத்தை பாக்கியா செய்தால் சும்மா இருப்பீங்களா என கேட்கிறார். பாக்கியா முடிவு எடுத்தாலும் உன் மகன் மன்னிப்பு கேட்டு கூட்டிக் கொண்டு வர வேண்டும் ஆனால் அவன் அப்படி செய்யவில்லை என சொல்ல, எல்லாத்துக்கும் ராதிகா தான் காரணம் என ஈஸ்வரி சொல்ல, உன் மகன் மீது தான் எல்லாம் தவறு என தாத்தா சொல்கிறார். பின் ஈஸ்வரி செல்வியை அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு கிளம்புகிறார். தாத்தா சொல்வதை கேட்காமல் கிளம்புகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here