சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் – ப்ரோமோ!

0
சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் - ப்ரோமோ!
சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் - ப்ரோமோ!
சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் – ப்ரோமோ!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில், பெரிய சமையல் ஆர்டரை செய்ய முடியாது என பல தடவை கோபி திட்ட அக்கம் பக்கத்தினர் உதவி உடன் பாக்கியா செய்து முடித்து பாராட்டை பெறுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிற்கு மிகப்பெரிய சமையல் ஆர்டர் கிடைக்கிறது. அதை செய்து முடிக்க எழில் ஊக்கப்படுத்த, கோபி மற்றும் ஈஸ்வரி முடியாது என திட்டி விடுகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்க சிலர் முடியாது என சொல்லி விடுகின்றனர். அமிர்தாவின் உதவி உடன் பாக்கியா மறுபடியும் பேச சிலர் செய்ய ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் மளிகை பொருள்கள், பாத்திரம் என அனைத்தும் கேட்க காசு இல்லாமல் பாக்கியா தவிக்கிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

பின் கோபி கண்டபடி திட்ட பாக்கியா என்னால் முடியும் என தொடர்ந்து அவர் வேலைகளை செய்கிறார். தற்போது அடுத்து நடக்கும் எபிசோடுகளில் அவர் செய்து முடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாக்கியா அக்கம் பக்கம் வீடுகளுக்கு சென்று சமைக்க சொல்ல அதில் ஒருவர் என் மனைவியை சமைக்க சொல்ல நீங்க யாரு என கேட்டு கோபியிடம் சண்டை போடுகிறார். கோபி பதிலுக்கு பாக்கியாவை திட்டுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஜீவாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

பின் பாக்கியா நினைத்தது போல அனைவரும் சமைத்து கொடுக்க, அது பெரிய வண்டியில் ஏற்றப்படுகிறது. தொழிலதிபர் இன்னும் சாப்பாடு வரவில்லையா என கேட்க சரியான நேரத்தில் சாப்பாடு வருகிறது. அனைவருக்கும் பாக்கியா பரிமாற, சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கிறது என பாராட்டுகின்றனர். கொடுத்த வேலையை சரியாக செய்து முடித்த சந்தோஷத்தில் பாக்கியா பெருமையாக நடந்து வருகிறார். அவருடன் அமிர்தாவும் வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!