மூர்த்தி கண்ணன் நடுவே மாட்டிக் கொண்ட கோபி, குழந்தை பற்றி பேசிய பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
மூர்த்தி கண்ணன் நடுவே மாட்டிக் கொண்ட கோபி, குழந்தை பற்றி பேசிய பாக்கியா - இன்றைய
மூர்த்தி கண்ணன் நடுவே மாட்டிக் கொண்ட கோபி, குழந்தை பற்றி பேசிய பாக்கியா - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
மூர்த்தி கண்ணன் நடுவே மாட்டிக் கொண்ட கோபி, குழந்தை பற்றி பேசிய பாக்கியா – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” மகா சங்கமம் சீரியலில், குடும்பத்தில் பெண்கள் அனைவரும் வீட்டில் வேலை செய்து பின் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகின்றனர். பெண்கள் அனைவரும் ஒன்றாக தூங்க, மூர்த்தியும் கண்ணனும் கோபி உடன் தூங்குகின்றனர். அதனால் கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது.

மகா சங்கமம்:

இன்று “மகா சங்கமம்” சீரியலில், குடும்பத்தில் பெண்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமைக்கின்றனர். பின் இடம் இல்லாமல் இருப்பதால் ஆண்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது கோபி சரியாக சாப்பிடாமல் இருக்க மூர்த்தி அவருக்கு நிறைய சாப்பாட்டை வைக்கிறார். பின் செழியனும் சரியாக சாப்பிடாமல் இருப்பதால் ஜீவா செழியனுக்கு சாப்பாடு வைக்கிறார். ஆனால் செழியன் கொஞ்சமாக தான் சாப்பிடுவார் என அனைவரும் சொல்கின்றனர். அடுத்து இனியா ரூமில் மீனாவும் ஐஸ்வர்யாவும் தூங்க வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது வீட்டு வேலை செய்வது பற்றி பேசிவிட்டு ஐஸ்வர்யா கண்ணனை திருமணம் செய்ததற்கு நான் தான் காரணம் என சொல்கிறார். நாங்க பேச சொன்னதால் தான் நீங்க கண்ணன் மாமாவிடம் பேசுனீங்க இல்லை என்றால் வேறு பையனுடன் திருமணம் முடிந்திருக்கும் என சொல்கிறார். பின் கதிர் கண்ணன், எழில் செழியன் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணன் புரோட்டா சாப்பிட சென்று போலீஸ் பார்த்து பயந்ததை சொல்லி கிண்டல் செய்கின்றனர்.

எழில் தண்ணீ அடிபீங்களா என கேட்க கதிர் வேண்டாம் என சொல்கிறார். அப்போது மூர்த்தி வர அவரிடமும் கேட்கின்றனர். ஆனால் மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் இனியா கோபி ரூமிற்கு தலைகாணியை எடுத்துக் கொண்டு வர உங்களுடன் இருவர் தூங்க இருப்பதாக சொல்கிறார்கள். அப்போது மூர்த்தியும் கண்ணனும் வந்து கோபிக்கு நடுவே படுத்து விடுகின்றனர். மறுபக்கம் பாக்கியா தனம் ஈஸ்வரி முல்லை பேசிக் கொண்டிருக்க பாக்கியா இந்த வீட்டிற்கு குழந்தைகள் வந்ததே இல்லை என சொல்கிறார்.

இதயத்தை கொண்டு வர திட்டமிடும் மருத்துவ குழு, கண்ணம்மாவை பேசவிடாமல் செய்த பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ஆனால் எங்க வீட்டில் இருவரும் செய்யும் சேட்டைகள் தான் இருக்கும் என தனம் சொல்ல, ஈஸ்வரி அடுத்து முல்லை குழந்தை வந்துவிட்டால் மூன்று பேரும் சேர்ந்துவிடுவார்கள் என சொல்கிறார். அதை கேட்டு முல்லை வருத்தப்படுகிறார். பின் தனம் முல்லைக்கு நடந்ததை சொல்ல ஜெனிக்கும் அப்படி நடந்திருக்கிறது என சொல்கிறார். அதை நினைத்து முல்லை சமாதானம் ஆகிக்கிறார். பின் கோபி அருகே மூர்த்தியும் கண்ணனும் படுக்க அதனால் கோபிக்கு பிடிக்காமல் இருக்கிறது.

கோபி படுக்க முடியாமல் படுக்க அப்போது மூர்த்தி குறட்டை விடுகிறார். அதை கேட்டு கோபிக்கு தூங்க முடியாமல் இருக்கிறது. பின் கண்ணன் கோபியை ஐஸ்வர்யா என நினைத்து முத்தம் கொடுக்கிறார். கோபிக்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. பின் மூர்த்தியும் தூக்கத்தில் ஏதேதோ பேசுகிறார். அதனால் கோபி நிம்மதி இல்லாமல் இருக்க அந்த நேரம் ராதிகா போன் செய்கிறார். கோபி மாட்டிக் கொண்டோம் என நினைக்க மூர்த்தி இந்த நேரத்தில் யார் போன் செய்வது என கேட்கிறார். அப்போது கோபி என்ன செய்வது என தெரியாமல் போனை வைத்துவிட்டு தூங்குகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here