பேச்சு, மூச்சின்றி மயங்கி விழுந்த அசீம், பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் – பரபரப்பான பிக் பாஸ் வீடு!

0
பேச்சு, மூச்சின்றி மயங்கி விழுந்த அசீம், பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் - பரபரப்பான பிக் பாஸ் வீடு!
பேச்சு, மூச்சின்றி மயங்கி விழுந்த அசீம், பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் - பரபரப்பான பிக் பாஸ் வீடு!
பேச்சு, மூச்சின்றி மயங்கி விழுந்த அசீம், பதறிப்போன ஹவுஸ்மேட்ஸ் – பரபரப்பான பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் போட்டியில் மிகவும் Strong போட்டியாளராக கருதப்படும் அசீம் திடீரென்று மயங்கி, சுய நினைவில்லாமல் விழுந்துள்ளார். இதனால் மொத்த பிக் பாஸ் வீடும் பதறி போய் உள்ளது.

மயக்கத்தில் அசீம்:

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்து சண்டை தான் பயங்கரமாக நடந்து வருகிறது. மற்ற சீசன்களில் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் சண்டைகள் மிகவும் பெரிய அளவில் நடக்கிறது. ஆளுக்கு ஒரு பக்கம் கத்துவதே எபிசோடாக உள்ளது. நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் அசீம் தொடர்ந்து மற்ற போட்டியாளர்களுடன் சண்டை போட்டு வருகிறார்.

Follow our Instagram for more Latest Updates

கருத்து வேறுபாடுகள் சகஜம் தான் என்றாலும், அனைவரும் தனது கருத்து மட்டுமே சரி என்று வாதிடுகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் நடந்து வரும் ஏலியன், காட்டுவாசிகள் டாஸ்க்கும் வழக்கம் போல் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் தான் சென்று வருகிறது. இதில், காட்டுவாசிகள் டீமில் இருக்கும் அசீம், நேற்று முதல் சற்று மன அழுத்தத்தில் இருந்து வருவது தெரிகிறது. நேற்று உடை மாற்றும் அறையில் சென்று அவர் கதறி அழும் போது ADK தான் சமாதானம் செய்து கூட்டி வந்தார்.

தனது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சன் டிவி முன்னணி சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், இன்று காலை வெளியான வீடியோ ஒன்றில், இனி நான் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது, என்னை வெளியே அனுப்புங்க என்று பிக் பாஸிடம் தெரிவித்தார். சிறிது நேரத்தில் கார்டன் ஏரியாவில் கதிர் அருகில் உட்கார்ந்திருக்கும் போது, எழுந்த அசீம் அப்படியே திடீரென்று மயங்கி விழுந்து விட்டார், தண்ணீர் தெளித்தும் சுய நினைவின்றி இருக்கிறார். இதனால் அனைவரும் அசீமை மெடிக்கல் ரூமிற்கு தூக்கி கொண்டு செல்கின்றனர். மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளராக கருதப்படும் அசீமிற்கு இப்படி ஆனது தெரிந்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!