இதயத்தை தானமாக கொடுக்க ஒப்புக்கொள்ளும் ஆயிஷாவின் பெற்றோர், கண்ணம்மாவை வாழ்த்தும் விக்ரம் – இன்றைய எபிசோடு!

0

இதயத்தை தானமாக கொடுக்க ஒப்புக்கொள்ளும் ஆயிஷாவின் பெற்றோர், கண்ணம்மாவை வாழ்த்தும் விக்ரம் – இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் சாமர்த்தியமான நடவடிக்கையால் ஆயிஷாவின் பெற்றோர் இதயத்தை தானமாக கொடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். இந்த விஷயத்தை அறிந்ததும் விக்ரம் கண்ணம்மாவை பாராட்டுகிறார்.

பாரதி கண்ணம்மா

கடந்த சில எபிசோடுகளாக ஆக்சிடன்ட், உடல் உறுப்பு தானம் என சில பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இன்று கண்ணம்மா ஒரு பெரிய விஷயத்தை அசால்டாக செய்து முடிக்கிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஆக்சிடன்ட்டில் சிக்கிக்கொள்ளும் குழந்தை ஆயிஷா மூளைச்சாவு அடைந்ததாக பாரதி சொல்ல அவளின் பெற்றோர் கதறி அழுகிறார்கள். தொடர்ந்து சக்திக்காக பேச ஆரம்பிக்கும் பாரதி, சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்தி என்ற பெண்ணுக்கு இதயம் பலவீனமாக இருக்கிறது.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு…!

அந்த குழந்தை இப்போது உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள். இப்போது உங்கள் குழந்தைக்கு இதயம் நன்றாக வேலை செய்கிறது. அதனால் அந்த பெண்ணின் இதயத்தை எடுத்து சக்திக்கு பொருத்தினால் அவள் உயிர் பிழைப்பாள் என்று பேசுகிறார். ஆனால், என் குழந்தையை நான் எப்படி வேண்டுமானாலும் காப்பாற்றிக் கொள்கிறேன். அதற்காக கண் எடுக்கிறேன், இதயம் எடுக்கிறேன் என கூறிக்கொண்டு வராதீர்கள் என்று வருத்தத்தில் ஆயிஷாவின் பெற்றோர் கண்டபடி பேசிவிடுகிறார். இப்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பாரதி, விக்ரமிடம் இந்த தகவலை கூறுகிறார்.

மறுபக்கத்தில், பாரதி சென்ற விஷயம் சரியாக வரவில்லை என்றதும் அவருடன் வந்திருக்கும் மருத்துவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், புத்திசாலித்தனமாக யோசிக்கும் கண்ணம்மா சக்தியின் அப்பா மற்றும் அம்மாவை ஆயிஷா இருக்கும் மருத்துவமனைக்கு வரவைக்கிறார். அங்கு வைத்து, ஆயிஷாவின் பெற்றோர்களின் காலில் விழுந்து கதறும் சக்தியின் அம்மா, நான் தான் சக்தியின் அம்மா. என் பொண்ணோட உயிர் அங்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவளுக்கும் உங்கள் மகளின் வயசு தான் இருக்கும். அவளுக்கு உடனடியாக இதயம் தேவைப்படுகிறது.

உங்கள் மகளின் இதயத்தை அவளுக்கு பொருத்தினால் அவள் உயிருடன் இருப்பாள். அவளுக்கு உங்கள் மகளின் இதயத்தை தானமாக கொடுங்கள். இனி ஆயிஷாவும், சக்தியும் ஒன்று தான். அவளும் உங்கள் குழந்தை தான் என்று கெஞ்சுகிறார். இதை கேட்டு கண்கலங்கும் ஆயிஷாவின் பெற்றோர் என் பொண்ணோட இதயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என அனுமதி கொடுக்கிறார். இப்போது, நடந்த விஷயத்தை கண்ணம்மா, பாரதியிடம் சொல்ல அவர் சந்தோஷத்தில் கண்ணம்மாவை பாராட்டுகிறார். தொடர்ந்து இந்த விஷயத்தை சௌந்தர்யாவிடம் சொல்லி விக்ரம் சந்தோஷப்படுகிறார். அடுத்தபடியாக, வெண்பாவின் அம்மா சௌந்தர்யாவை சந்திக்க அவரது வீட்டுக்கு வருவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here