தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய விருது - விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசின் சார்பில் ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய விருது – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் முதல்வர் மாநில விளையாட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருது பெற தகுதியானவர்கள் ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் அரசு தெரிவித்துள்ளது. இவ்விருதுடன் சேர்த்து ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு விருது:

தமிழகத்தில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விளையாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. மற்ற ஆண்டுகளை தொடர்ந்து நடப்பாண்டு விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பதக்கம் பெற்ற தலா 2 ஆண், பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 3 ஆண்டுகளாக வசித்து வரும் இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சாா்பாக கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் மாநில விளையாட்டு விருது பெற தகுதியானவர்கள் ஆவர். எனவே குறைந்தது 5 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்துவரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவா்.

இந்த விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். எனவே தேர்வு செய்யப்படுவோருக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விதிமுறைகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்ப படிவத்தையும் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை – 600003 என்ற முகவரிக்கு ஜூன் 10 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here