இரண்டாவது அணியாக பைனலுக்கு சென்ற ஆஸ்திரேலியா – இந்தியா உலகக்கோப்பை வெல்லுமா?
நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி பைனலுக்கு சென்றுள்ளது.
உலகக்கோப்பை:
உலகக்கோப்பை அரையிறுதி போட்டியின் முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு சென்றது. இதனை அடுத்து, நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் மோதிக்கொண்டனர். இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியினர் 49.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை மட்டுமே பெற்றனர்.
தமிழகத்தில் நவ.19 உள்ளூர் விடுமுறை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைந்து மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது அணியாக பைனலுக்கு முன்னேறி உள்ளது. உலக கோப்பை பைனல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணி மோதிக்கொள்ள இருக்கின்றனர். இதில் இந்திய அணி வெல்லுமா என ரசிகர்களின் மத்தியில் கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.