உலகக்கோப்பை அணியை தேர்வு செய்த ஆஸ்திரேலியா – கேப்டனாக விராட்கோலி தேர்வு!!!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய 11 போட்டியாளர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து லீக் ஆட்டங்களும் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. நவ.15 முதல் அரையிறுதிக்கான போட்டிகள் துவங்கவுள்ள நிலையில் இந்த லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தேர்வு செய்துள்ளது.
உங்கள் ஆதாரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? – எளிய வழிமுறைகள்!
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த டி காக், எய்டன் மார்க்ரம், மார்கோ யான்சென் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா, இந்தியாவை சேர்ந்த விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி ஆகிய 11 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.