ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் – முன்னணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

0
ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் - முன்னணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் - முன்னணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் – முன்னணி வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

வரும் அக்டோபர் மாதத்தில் துவங்கவுள்ள உலக கோப்பை T20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முன்னணி நட்சத்திர வீரர்களுடன் சில புதிய வீரர்களின் பெயர்களும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள்

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள T 20 உலகக் கோப்பை தொடருக்கான வலுவான வீரர்கள் 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான நட்சத்திர வீரர்கள் அணியுடன் மீண்டுமாக இணைந்துள்ளதால் இந்த அணிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. அந்த வகையில் முன்னணி வீரர்களான ஆரோன் ஃபின்ச் மற்றும் முழங்கை காயத்திலிருந்து மீண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித்தும் தற்போது அணியில் சேர்ந்துள்ளார்.

தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – யார் யாருக்கு கிடைக்கும்?

அதன்படி 15 பேர் கொண்ட குழுவில் பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், மார்கஸ் ஸ்டோனிஸ், க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் கேன் ரிச்சர்ட்சன் போன்றவர்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான சமீபத்திய சுற்றுப்பயணங்களில் கலந்து கொள்ளாததால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனுடன் மேற்கிந்திய தீவுகளில் நடந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி சென்ற வீரர் அலெக்ஸ் கேரிக்கு பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸை உலகக்கோப்பை தொடரில் நிர்வாகம் இணைத்துள்ளது.

அணியின் தேர்வு தொடர்பாக தேர்வாளர்களின் தலைவர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், ‘உலகின் சில சிறந்த வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இவர்களை வைத்து உலகின் மிகச்சிறந்த T 20 அணிகளுக்கு எதிராக வெற்றி பெறக்கூடிய அனுபவத்துடன் இணைந்து களம் காணுவோம்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷில் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய லெக்ஸ்பின்னர் குயின்லாண்ட் வீரர் மிட்ஷெல் ஸ்வீப்ஸன் அணியின் முன்னணி வீரர்களான ஆடம் ஜாம்பா, மேக்ஸ்வெல் மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோருடன் இணைந்துள்ளார்.

மேலும் ஆல்ரவுண்டர்களான டான் கிறிஸ்டியன் மற்றும் டேனியல் சாம்ஸ், நாதன் எல்லிஸ் ஆகியோர் காத்திருப்பு வீரர்களின் பட்டியலில் உள்ளனர். இந்த வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி, செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவார்கள் என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. T 20 போட்டிக்கான முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் சூப்பர் 12 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும் T20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

T20 உலகக் கோப்பை அணிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு: ஆரோன் பின்ச் (C), பேட் கம்மின்ஸ் (WC), ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்வெப்சன்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!