ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் விபரம் – RBI பட்டியல்!

0
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் விபரம் - RBI பட்டியல்!
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் விபரம் - RBI பட்டியல்!
ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் விபரம் – RBI பட்டியல்!

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களின் வாரியாக வங்கி விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது. வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை நாட்களை தவிர கூடுதலாக பண்டிகைகளை ஒட்டி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கி ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியலை முன்னதாக வெளியிட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, நீங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வழக்கமான வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளைத் தவிர, வங்கிகள் மதம் சார்ந்த பண்டிகை மற்றும் அரசு விடுமுறை என்று 8 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.

IND vs ENG 2வது டெஸ்ட் – இந்திய அணி 346 ரன்களுக்கு 7 விக்கெட் இழப்பு! ரஹானே ஏமாற்றம்!

பெரும்பாலான பண்டிகைகள் நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. மாநில வாரியாகவோ அல்லது பிராந்திய வாரியாகவோ தான் கொண்டாடப்படுகிறது. முஹர்ரம் (அஷூரா) மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வங்கி விடுமுறைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றது.

விடுமுறை நாட்களின் பட்டியல்:

  • ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம்
  • ஆகஸ்ட் 16: பார்ஸ் புத்தாண்டு (பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கி விடுமுறை)
  • ஆகஸ்ட் 19: முஹர்ரம் (அசூரா) ( அகர்தலா, அகமதாபாத், பெலாப்பூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, மற்றும் ஸ்ரீநகர்)
  • ஆகஸ்ட் 20, 2021 – முஹர்ரம்/முதல் ஓணம் (பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம்)
  • ஆகஸ்ட் 21, 2021 – திருவோணம் (திருவனந்தபுரம் மற்றும் கொச்சி)
  • ஆகஸ்ட் 22, 2021 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 23, 2021 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி (திருவனந்தபுரம் மற்றும் கொச்சி)
  • ஆகஸ்ட் 28, 2021 – நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 29, 2021 – ஞாயிறு
  • ஆகஸ்ட் 30, 2021 – ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வாட் -8)/கிருஷ்ண ஜெயந்தி (அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் கேங்டாக்)
  • ஆகஸ்ட் 31, 2021 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி (ஹைதராபாத்)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!