TN 12th Supplementary Exam Time Table 2021 (Out) | தமிழகத்தில் ஆகஸ்ட் 6 முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 6 முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் - அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 6 முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் - அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 6 முதல் 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் – அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் கடந்த திங்கள் கிழமை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னதாக விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் மற்றும் தேர்வு முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடக்க இருப்பதாகவும், அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு துணைத்தேர்வுகள்:

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்களில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி டிவி மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் வழக்கமாக மார்ச் மாதத்தில் நடத்தப்படும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. மேலும், மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து 30% பாடத்திட்டங்களை அரசு குறைத்து அறிவித்தது.

தமிழகத்தில் ஜூலை 24 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மே மாதத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் உச்சத்தில் இருந்ததால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கு மதிப்பெண்கள் அவசியம் என்பதால் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க அரசு முடிவு செய்தது. இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு கடந்த ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

அரசின் இந்த முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் நடக்கும் என்று அரசு முன்னதாக அறிவித்தது. அதன்படி, மே 2021 தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்களுக்கும், அரசு அறிவித்துள்ள முடிவுகளில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு ஜூலை 23ம் தேதியான இன்று முதல் ஜூலை 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக வெளியிடப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் கண்டிப்பாக அனைத்து பாடங்களுக்கும் தேர்வெழுத வேண்டும். குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியாது. மேலும், இவர்களுக்கு துணைத்தேர்வுகளில் வரும் மதிப்பெண்களே இறுதியானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!