தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பட்டப்படிப்பு பயின்ற அனைத்து இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

தமிழகத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான உதவித்தொகை குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, விழுப்புரம் மாவட்டத்தில் படித்த வேலையற்ற இளைஞர் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவா்கள், தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் 10 ஆம் வகுப்பிற்கும் மேல் படித்தவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.6.2022 அன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தவா்கள் என அனைவரும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், வயது வரம்பு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர்களுக்கு 30.9.2022ன் படி 45 வயதுக்குள்ளும், இதனை தவிர்த்து மற்ற சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவா்களுக்கு உதவித்தொகையாக ரூ.200 வழங்கப்படும் எனவும், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 உதவி தொகையும், பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.600 உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

EPFO வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய எச்சரிக்கை!

மேலும், பத்தாம் வகுப்பு தோல்வியடைந்த மற்றும் தோ்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 உதவித்தொகையும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.750 உதவி தொகையும், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் காண்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here