நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி “ரோஜா” சீரியல் – நியாயம் இல்லாத காட்சிகள்! வைரலாகும் மீம்ஸ்!

0
நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி
நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி "ரோஜா" சீரியல் - நியாயம் இல்லாத காட்சிகள்! வைரலாகும் மீம்ஸ்!
நெட்டிசன்களிடம் சிக்கிய சன் டிவி “ரோஜா” சீரியல் – நியாயம் இல்லாத காட்சிகள்! வைரலாகும் மீம்ஸ்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் பல டாப் சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தக்க வைத்து இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் காட்டப்பட்ட காட்சிகளை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரோஜா சீரியல்:

ரோஜா சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அர்ஜுன் அத்தை மகளான ரோஜாவை திருமணம் செய்து கொள்ள அவரது அத்தை மகள் தான் ரோஜா என தெரிந்து அவர் ரோஜா மீது பாசமாக இருக்கிறார். ஆனால் நான் தான் செண்பகத்தின் மகள் என சொல்லி, அணு இத்தனை நாட்களாக குடும்பத்தை ஏமாற்றி இருக்கிறார். அணுவின் முகத்திரையை கிழிக்க அர்ஜுன் பல வேலைகளை செய்ய அதை எல்லாம் அணுவின் திட்டம் மூலமாக முறியடிக்கிறார்.

யார் இந்த ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டி? முழு தகவல் இதோ! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் ரோஜா தான் இந்த வீட்டின் வாரிசு என தெரிந்து கொள்ள DNA டெஸ்ட் எடுக்க அழைத்து செல்கின்றனர். அந்த சமயம் அணு வர ரோஜாவை கொல்ல முடிவு செய்கிறார். அதனால் அணு பல திட்டங்களை செய்யப்படுத்த அர்ஜுன் அதை எல்லாம் முறியடிக்கிறார். அடுத்ததாக ரோஜாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை ஏற்கனவே தெரிந்து கொண்ட ரோஜாவும் அர்ஜுனும் அதற்காக வேறு ஒரு பெண்ணுடைய முகத்தில் ரோஜா முகத்தை மாற்றுவார்கள். அதுவும் நடுரோட்டில் இவர்கள் செய்த காட்சி பலரையும் வியக்க வைத்திருந்தது.

Vijay TV Bigg Boss 5 Promo | எதிர்பாராததை எதிர் பாருங்கள் என சொல்லும் கமல்! குழப்பத்தில் ரசிகர்கள்!

இந்த காட்சியை பார்த்த பலர் இந்த சீரியலில் இப்படி ஒரு காட்சியா என சொல்லி கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். டாப் சீரியலில் இப்படி லாஜிக் இல்லாத காட்சியை கொண்டு வந்தால் பலர் இந்த சீரியல் பார்க்கும் ஆர்வத்தை இழந்துள்ளனர். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி இருந்தாலும் இதில் இருக்கும் கதை ஒரே மாதிரி தான் இருக்கிறது. இருந்தாலும் சீரியல் TRP நல்ல இடத்தில் இருந்தது. இந்நிலையில் இப்படி ஒரு காட்சியால் ரசிகர்கள் முகம் சுளித்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!