பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவை சீண்டும் ரசிகர்கள் – கர்ப்பகால புகைப்படம் இப்படி இருக்கனும்!

0
பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பாவை சீண்டும் ரசிகர்கள் - கர்ப்பகால புகைப்படம் இப்படி இருக்கனும்!
பாரதி கண்ணம்மா' வில்லி வெண்பாவை சீண்டும் ரசிகர்கள் - கர்ப்பகால புகைப்படம் இப்படி இருக்கனும்!
பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவை சீண்டும் ரசிகர்கள் – கர்ப்பகால புகைப்படம் இப்படி இருக்கனும்!

நடிகர், நடிகையர் செய்யும் பல செயல்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டாலும், சில விஷயங்களை பற்றி சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து நடிகர், நடிகையரை வம்பிழுக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், தற்போது பாரதி கண்ணம்மா வெண்பாவை சீண்டி உள்ளனர்.

கர்ப்பகால புகைப்படம்:

சமீபத்தில் மீடியாவில் வனிதாவுக்கு அடுத்த படியாக எதை செய்தலும் அதை சர்ச்சையில் முடிக்கும் நடிகை பாரதி கண்ணம்மா வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனா தான். இவர், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அந்த சந்தோசத்தை போட்டோஷூட்கள் மூலமாக வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் வித்தியாசமாக போட்டோஷூட் எடுக்க வேண்டும் என்பதற்காக நீருக்கு அடியில், குதிரையுடன் என வயிற்றில் குழந்தையுடன் போட்டோஷூட்களை எடுத்து வருகிறார்.

மூர்த்தியுடன் சேர்ந்து தனம் வெளியிட்ட வீடியோ – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட் கலாட்டா!

இது போல், ஆபத்தான செயல்களில் கர்ப்பகாலத்தில் ஈடுபடக்கூடாது என்று பலரும் அவரை திட்டு வருகின்றனர். அதேபோல், தமிழ் சினிமாவில் தனது குழந்தை பருவத்தில் கமல் மற்றும் சிவாஜி இருவரும் இணைந்து நடித்த தேவர் மகன் படத்தில் அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து பல படங்களிலும் நடித்துள்ளார். பருவ வயது முதல் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். மேலும், சின்னத்திரையில் பல மொழிகளில் கதாநாயகியாகவும், வில்லியாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தன்னை விட 12 வயது மூத்த இசை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 9 வருடங்கள் கழித்து பெண் குழந்தை பெற்றெடுத்தார். இவர் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது 13 வது வருட திருமண நாளை கொண்டாடி, அதனை புகைப்படமாக வெளியிட்டார். அதனுடன் தனது குடும்பத்தில் ஜனவரி 2022ஆம் ஆண்டு இரண்டாவது குழந்தை வரப்போகின்ற செய்தியையும் தெரிவித்து இருந்தார். இதனால் இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மாவுடன் மீண்டும் இணைந்த தனம் – வைரல் வீடியோ!

மேலும், பிங்க் கலர் புடவையில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இவருக்கு பாராட்டுகளை தெரிவித்த ரசிகர்கள், அதே சமயத்தில் நடிகை ஃபரீனாவை வம்பிழுத்துள்ளனர். கர்ப்ப காலத்தில் எப்படி அடக்க ஒடுக்கமாக இருப்பது என்பதை சீனியரை பார்த்து கத்துக்கோங்க என்பது போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!