அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!

0
அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் - பிசிசிஐ அறிக்கை!
அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் - பிசிசிஐ அறிக்கை!

அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு என இரண்டு புதிய அணிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான வீரர்கள் ஏலம் அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஐபிஎல் அணிகளுக்கான ஏலம்:

இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் வருடா வருடம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் இதனை கொண்டாடி கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்தியாவில் 14வது சீசன் நடைபெற்று வருகிறது. அதன் முதற்கட்டம் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்றது. அந்நேரத்தில் கொரோனா தொற்று வீர்ரகளுக்கு பரவியதால் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது.

IPL Countdown 2021: இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா? மோர்கனின் படை தயார்!!

கடந்த ஆண்டும் கொரோனா தொற்று பரவியதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பார்வையாளர்கள் இன்றி சிறப்பாக போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதே போல் இந்த அணையுடம் வரும் செப் 19 முதல் அமீரகத்தில் மீதமுள்ள போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கடந்த சில சீசன்களாக 8 அணிகள் தான் பங்கேற்று வருகின்றன. தற்போது மேலும் 2 புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆட்சி குழு அதற்கான டெண்டர் அறிவிப்பை முன்னதாக வெளியிட்டு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளித்தது. கலந்து கொள்வர், தகுதித் தேவைகள், ஏலங்களை சமர்ப்பிப்பதற்கான செயல்முறை, முன்மொழியப்பட்ட புதிய அணிகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளிட்ட ஏலங்களை சமர்ப்பித்தல் மற்றும் மதிப்பீடு செய்யும் விரிவான விதிமுறைகள் திரும்பப்பெற முடியாத கட்டணமாக ரூ. 10,00,000/- என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

IPL Countdown 2021 : முதல் கோப்பையை வெல்லுமா கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்?!

இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட வரும் செப்டம்பர் 21ம் வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவரை முறையாக முடித்த பின்னர் வீரர்களுக்கான ஏலம் வரும் அக்டோபர் 17 அன்று நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!