WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புகைப்படம், லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் விவரங்களை மறைக்கும் புதிய அம்சம்!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புகைப்படம், லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் விவரங்களை மறைக்கும் புதிய அம்சம்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - புகைப்படம், லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் விவரங்களை மறைக்கும் புதிய அம்சம்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – புகைப்படம், லாஸ்ட் சீன், ஸ்டேட்டஸ் விவரங்களை மறைக்கும் புதிய அம்சம்!

வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது தங்கள் சுயவிவரப் படம், லாஸ்ட் சீன் மற்றும் ஸ்டேட்டஸ் அப்டேட்களை தங்களது கான்டாக்டில் உள்ள மற்றவர்களிடம் இருந்து மறைக்கும் வகையில் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சம்

பயனர்கள் தங்கள் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் புதிய அம்சங்களை WhatsApp அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த வகையில் தற்போது உடனடி செய்தியிடல் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் அப்டேட் உங்கள் சுயவிவரப் படம், ஸ்டேட்டஸ் அப்டேட் மற்றும் வேறு சில தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து மறைக்க புதிய வழியைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, நீங்கள் பதிவிட்ட தகவலை எல்லோரும் பார்க்கக்கூடாது அல்லது யார் பார்க்க முடியும் என்பதை தேர்ந்தெடுப்பதில் கூடுதல் கட்டுப்பாட்டை வாட்ஸ்அப் இணைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

பொதுவாக, உங்கள் சுயவிவரப் படம், கடைசியாகப் பார்த்த விவரங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளை உங்கள் எல்லா தொடர்புகளுக்கும் அல்லது யாருக்கும் தெரியாமல் காட்டுவதற்கு நீங்கள் உங்கள் விருப்பத்தை தேர்வு செய்யலாம். அந்த வகையில் வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட் மை கான்டக்ட்ஸ் என்ற விருப்பத்தை இங்கே சேர்க்கிறது. மேலும் இந்த புதிய விருப்பத்தின் மூலம், WhatsApp பயனர்கள் தங்கள் சுயவிவரப் படம், லாஸ்ட் சீன் மற்றும் பிற தொடர்பு விவரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைத் தவிர மற்ற எல்லா நபர்களுக்கும் காண்பிக்க முடியும். இந்த புதிய அப்டேட் உடன், வாட்ஸ்அப் நான்கு தனியுரிமைக் கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்டுள்ளது.

அனைவரும்: லாஸ்ட் சீன், சுயவிவரப் புகைப்படம் அல்லது ஸ்டேட்டஸ் அப்டேட் என அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும்.

எனது கான்டாக்ஸ்ட்: லாஸ்ட் சீன், சுயவிவரப் புகைப்படம் அல்லது ஸ்டேட்டஸ் நீங்கள் தேர்வு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

எனது கான்டக்ஸ்ட் தவிர: லாஸ்ட் சீன், சுயவிவரப் புகைப்படம் அல்லது ஸ்டேட்டஸ் ஆகியவை உங்கள் அட்ரஸ் புத்தகத்திலில் இருந்து நீங்கள் விலக்கியவர்களை தவிர மற்ற கான்டக்ஸ்ட்ஸுக்கு கிடைக்கும்.

நோ ஒன்: லாஸ்ட் சீன், சுயவிவரப் புகைப்படம் அல்லது ஸ்டேட்டஸ் ஒருவராலும் பார்க்க முடியாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!