WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - விரைவில் வரவிருக்கும் புதிய அப்டேட்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - விரைவில் வரவிருக்கும் புதிய அப்டேட்!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் செயலி அதிக பயனர்களால் பயன்படுத்தப் படுகிறது. மேலும் வாட்ஸ் ஆப் ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

புதிய அப்டேட்:

வாட்ஸ்அப், கடந்த பல வாரங்களுக்காகவே ஏராளமான புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒரு அதிரடியான அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், அட்மின்களுக்கான டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன் (Delete messages for everyone) என்கிற அம்சம் ஆகும். இதுநாள் வரையிலாக ‘டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன்’ என்கிற அம்சம் தனிப்பட்ட நபர்களுக்கான ஒரு அம்சமாகவே வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கிறது.

Exams Daily Mobile App Download

ஆனால் இனிமேல் அது குரூப் அட்மின்களுக்கும் அணுக கிடைக்கும். அதாவது இனிமேல் வாட்ஸ்அப் குரூப்பில் ‘கிரிஞ்ச்’ தனமான மெசேஜ்களை அனுப்பினால், அது மற்றவர்களை எரிச்சல் அடைய வைக்கும் என்று அட்மின்கள் நினைத்தால், அதை அவர்களால் ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய முடியும். மேலும் WABetInfo-வின் கூற்றுப்படி, இந்த அம்சம் தற்போது சில பீட்டா டெஸ்டர்களுக்கு அணுக கிடைக்கிறது. ஆக இது கூடிய விரைவில் அனைத்து வகையான வாட்ஸ்அப் அட்மின்களுக்கும் வந்து சேரும் என்று தகவல்கள் கூறுகிறது.

தமிழகத்தில் சமூக வலைதளத்தில் மின்கட்டணம் குறித்து போலியான தகவல்? அமைச்சர் எச்சரிக்கை!

குரூப்பில் உள்ள ஒரு மெசேஜை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்ய, அட்மின்களுக்கு உதவும் இந்த அம்சம், சமீபத்தில் அல்ல, கடந்த ஆண்டே டெஸ்ட் செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப், கெப்ட் மெசேஜஸ் (Kept messages) என்கிற அம்சத்தையும் கொண்டு வரவுள்ளது. இந்த அம்சம், வாட்ஸ்அப் பீட்டாவின் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷன்களுக்கான எதிர்கால அப்டேட்டில் அணுக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் ஒரு புதிய சாட்போட் (Chatbot) வரப்போவதாகவும், ஒவ்வொரு முறையும் ஆப்பை அப்டேட் செய்யும் போது, குறிப்பிட்ட அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பற்றி அது தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!