Vodafone Idea வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் 5G பிரீமியம் அறிமுகம்!

0
Vodafone Idea வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விரைவில் 5G பிரீமியம் அறிமுகம்!
Vodafone Idea வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - விரைவில் 5G பிரீமியம் அறிமுகம்!
Vodafone Idea வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – விரைவில் 5G பிரீமியம் அறிமுகம்!

இந்தியாவில் வோடபோன் ஐடியா நிறுவனம் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், வோடபோன் ஐடியா 5G பிரீமியத்தின் விலை 4ஜியுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vodafone Idea சேவைகள்

இந்தியாவில் தற்போது தான் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்துள்ளது. அதாவது, இந்த ஏலத்தில் 5G சேவைகளுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்காக பெரிய தொகையை வோடபோன் ஐடியா நிறுவனம் செலவிட்டது. அதாவது, வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.18,800 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியிருக்கிறது. இதனால், இந்த ஆண்டின் இறுதிக்குள் கண்டிப்பாக வோடபோன் ஐடியா சேவைகளுக்கான கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 5ஜி சேவையை பிரிமியம் கட்டணத்தில் வழங்கலாம் என திட்டமிடப்பட்டு வருகிறது.

தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இந்த 5ஜி தொழில்நுட்பம் இணைய சேவையின் வேகத்தை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் செயற்கை நுண்ணறிவு, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்டட் ரியாலிட்டி ஆகியவற்றின் வேகத்தையும் கூட்டுகிறது. மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் 4ஜி அலைக்கற்றையை வாங்கியிருக்கிறது. இந்நிலையில், வோடபோன் நிறுவனம் புதிய ஸ்பெக்ட்ரத்தினை ஏலத்தின் மூலமாக பெற்றுள்ளதால் நிறுவனத்திற்கு ரூ.1,680 கோடி ரூபாய் வருடாந்திர தவணை சேருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் கடந்த ஜூன் 2022 மாதத்தின் முடிவில் மட்டுமே வோடபோன் நிறுவனம் சுமார் 7,295 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது நஷ்ட விகிதம் குறைவாகும். அதாவது, கடந்த ஆண்டை விட வோடபோன் நிறுவனம் 13.7 சதவீதம் கூடுதலாக வருவாய் ஈட்டியிருக்கிறது. மேலும், வோடபோன் ஐடியா 5G பிரீமியத்தின் விலை 4ஜியுடன் ஒப்பிடும் போது அதிகமாகவே இருக்கும் எனவும், அதிக டேட்டா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!