UGC- NET தேர்வர்கள் கவனத்திற்கு – தலைவர் முக்கிய அறிவிப்பு!

0
UGC- NET தேர்வர்கள் கவனத்திற்கு - தலைவர் முக்கிய அறிவிப்பு!
UGC- NET தேர்வர்கள் கவனத்திற்கு - தலைவர் முக்கிய அறிவிப்பு!
UGC- NET தேர்வர்கள் கவனத்திற்கு – தலைவர் முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் இரண்டாம் அமர்விற்கான UGC- NET தேர்வு செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், UGC- NET தேர்வு குறித்து பல போலியான தகவல் பரவுகிறது என UGC தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

UGC- NET தேர்வு:

பல்கலைக்கழக மானிய குழு-தேசிய தகுதி தேர்வை (UGC- NET) ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அதாவது ஜூலை, டிசம்பர் ஆகிய மாதங்களில் நடத்தப்படுவதுண்டு. கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு UGC- NET நடத்த முடியவில்லை. இதனால், 2021 டிசம்பர் மற்றும் ஜூன் 2022 மாதத்திற்கான UGC- NET தேர்வினை ஜுலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் அமர்விற்கான UGC- NET தேர்வு கடந்த ஜூலை 08, 09, 11, 12 ஆகிய தேதிகளில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது.

மேலும், அரசியல் அறிவு, மராத்தி, சீனம், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 30 பாடநெறிகளுக்கு நாடுமுழுவதும் உள்ள 225 நகரங்களில் 300க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் UGC- NET தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு பிறகு இரண்டாம் அமர்விற்கான UGC- NET தேர்வை ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளில் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட UGC- NET தேர்வு நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜகதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

மேலும், முதலாவது அமர்வு தேர்வில் விடுபட்டுள்ள பாடங்களையும் சேர்த்து 64 பாடநெறிகளுக்கு இரண்டாம் அமர்வு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையம் குறித்தான அறிவிப்பு செப்டம்பர் 11 ஆம் தேதி வெளியாகும் எனவும், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இரண்டாம் அமர்விற்கான UGC- NET தேர்விற்குரிய நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் அமர்வு UGC- NET தேர்வு குறித்து பல போலியான செய்திகளும் சமூக வலை பக்கங்களில் பகிரப்பட்டு வருவதால் ugcnet.nta.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தகவல்களை சரிபார்த்துக்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!