ரயில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் அறிமுகம்!

0
ரயில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் அறிமுகம்!
ரயில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு - சிறப்பு ரயில்கள் அறிமுகம்!
ரயில் பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் அறிமுகம்!

மக்கள் நலனை கருத்தில் கொண்ட மாநில அரசு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளதை அடுத்து தற்போது அதற்கான நேரம் மற்றும் தேதி குறித்த விவரங்களை தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது. இதனை அறிந்து பொது மக்கள் பயன் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சிறப்பு ரயில் :

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்படி ரயில் சேவைகளும் முடக்கப்பட்டு பல கட்டுப்பாட்டு விதிகளையும் அரசு அமல்படுத்தியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு பயணிக்க என்னும் மக்களின் தேவைகளுக்காக குறைந்த அளவிலான சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்த காரணத்தால் அனைத்து ரயில்களையும் மீண்டும் பழையபடி இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது.

தமிழகத்தில் வணிக வரித்துறையில் புதிய திட்டம் அறிமுகம் – அரசாணை வெளியீடு!

மேலும், சிறப்பு ரயில்கள் என்றாலே ஒவ்வொரு பண்டிகையின் போதும் இயக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த பொதுவான ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் தாக்களுக்கு பிறகு கடந்த சில மாதங்களாகவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து சிறப்பு ரயில்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வந்த வண்ணமாக உள்ளது. அதன்படி தற்போது ஆந்திர மாநில அரசும் கூட்ட நெரிசலை கருத்தில் வைத்து விசாகப்பட்டினம் – பெங்களூரு சிறப்பு ரயிலை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. அதாவது, விசாகப்பட்டினத்தில் இருந்து, தமிழகம் வழியாக கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூருக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

இந்த சிறப்பு கட்டண ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் 7, 14, 21, 28 மற்றும் செப்டம்பர் மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மாலை 3:55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.00 மணிக்கு பெங்களூர் சென்றடையும். மேலும், பெங்களூரில் இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் 8, 15, 22, 29 மற்றும் செப்டம்பர் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில், மாலை 3:50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில், மறுநாள் காலை 11:00 மணிக்கு விசாகப்பட்டினம் சென்றடையும். இந்த சிறப்பு கட்டண ரயில்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here