ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!

0
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!ரயில் பயணிகள் கவனத்திற்கு - IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!
ரயில் பயணிகள் கவனத்திற்கு – IRCTC யின் புதிய திட்டம் அறிமுகம்!

இந்தியாவில் 2 வருடங்களுக்கு பிறகு தற்போது வழக்கம் போல அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில் பயணிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் டோல் ஃப்ரீ எண்னை அறிமுகப்படுத்தியுள்ளது.

உதவி எண்:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று ரயில்வேத்துறை இத்துறையின் கீழ் இலட்சக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் மற்ற துறைகளை காட்டிலும் ரயில்வேத்துறையின் வருமானமும் அதிகம். இந்த நிலையில் ரயில்வேத்துறை கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரியத் தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியதால் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. தற்போது ரயில் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்த ஐஆர்சிடிசி இணையதளம் வந்தது முதல் டிக்கெட் எடுப்பதில் இருந்து வந்த குறைகள் களையப்பட்டுள்ளது. மேலும் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை தொடர்ந்து தற்போது ரயில் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இனி பயணிகள் ரயில் பயணத்தின் போது ஏதேனும் தகவல் அல்லது புகார்களுக்கு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் ரயில், ரயில் நிலையம் தொடர்பான புகார்கள், விஜிலென்ஸ் தகவல், பார்சல் விசாரணை, பொதுத் தகவல், புகார் நடவடிக்கை நிலை போன்ற வசதிகளும் இதில் கிடைக்கும்

பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!

இந்த ஹெல்ப்லைன் எண் பதிவுசெய்யப்பட்ட குரல் அமைப்பு ஆகும். அதனால் இதில் பயணிகள் பல்வேறு மொழிகளில் தகவல்களைப் பெற முடியும். ரயில் வருகை, புறப்பாடு, டிக்கெட் முன்பதிவு போன்றவற்றிற்கு 139 என்ற எண்ணிற்கு SMS அனுப்பலாம். இந்த திட்டம் மூலம் இனி ரயில் பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்து சேவைகளையும் பெற முடியும். இந்த உதவி எண் மூலம் கேட்டரிங் வசதியை பயணிகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here