தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு - அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ப. ரவிக்குமார் நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் திமுக அரசு தங்களது தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அந்த திட்டத்தை அமல்படுத்தி விட்டனர். அந்த வழிகாட்டுதலின்படி, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்திட தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 110 விதி கீழ் ஐந்து சவரனுக்குள் நகைக் கடன் வாங்கியவர்களுக்கு, கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் 14.60 லட்சம் நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறியிருந்தார். அதனை தொடர்ந்து நேற்று மட்டும் தமிழகத்தில் 1.03 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆவணங்களும், நகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, தகுதியான அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 14,51,042 பயனாளிகளுக்கு ரூ.5,296 கோடி அளவிற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது வரை தகுதியுள்ள 12,19,106 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த 1,45,364 பயனாளர்களுக்கு பெயர் பட்டியல் சேலம் மாவட்ட இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பெயர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 30 நாட்கள் கழித்து மேல்முறையீடு செய்தால் அது ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here