தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – ஏப்ரல் 20க்குள் மேல்முறையீடு!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு - ஏப்ரல் 20க்குள் மேல்முறையீடு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு - ஏப்ரல் 20க்குள் மேல்முறையீடு!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – ஏப்ரல் 20க்குள் மேல்முறையீடு!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களை கண்டறிந்து கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி தற்போது மாவட்ட வாரியாக தள்ளுபடி பெற தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் குவிந்தன. அதனால் நகைக்கடன் தள்ளுபடி பெற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைக்குட்பட்ட நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி நகைக்கடன் தள்ளுபடிக்கு விண்ணப்பித்த 48 லட்ச நபர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

REC பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.85000/-

இதில் 13 லட்ச பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மீதமுள்ளவர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும் அத்துடன் அரசு விதித்த நிபந்தனைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். மேலும் தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக நகைக்கடன் பெற தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் தவறு இருந்தாலும், நீங்கள் நகைக்கடன் தள்ளுபடிக்குரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்பவராக இருந்தும் தங்களின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லையெனில் மேல் முறையீடு செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

TN TRB 8000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தேனி கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கூறியதாவது, தேனியில் இதுவரை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுனுக்கும் கீழ் நகைக் கடன் பெற்ற 27,977 தகுதியான நபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தள்ளுபடி பெற தகுதி இருந்தும் தங்களின் பெயர் இடம்பெறவில்லையெனில் வருகிற ஏப்ரல் 20ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மேல்முறையிடு மனுவை அளிக்கலாம். அத்துடன் இவர்களுக்கு 30 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!