தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளவர்கள் புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க மூன்றாம் நபர் மூலம் இல்லாமல் இ-சேவை மையத்தில் நேரடியாக விண்ணப்பித்தால் 15 நாட்களில் ரேஷன் அட்டை வழங்கப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு:

மத்திய அரசால் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலமாக பல ஏழை,எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் குடும்ப தலைவிக்கு ரூ. 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, இந்த அறிவிப்பின் காரணமாக ஏராளமான மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்டுகளை பெற விண்ணப்பித்து வந்தனர். அதுமட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் சட்டமன்ற பேரவையில் 15 நாட்களில் புதிய மின்னனு குடும்ப அட்டை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

Exams Daily Mobile App Download

அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருபவர்களின் மனுக்களை ஒருவார காலத்திற்குள் ஒப்புதல் வழங்குவதற்கான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து வருபவர்களிடம் ரூ . 60 வசூலிக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், ஆதார் எண் சேர்த்தல், குடும்ப நகல் அட்டை பெறுதல் போன்ற செயல்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்ய ரூ.30 வசூலிக்கப்படுகிறது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 15ம் தேதி தொடங்கி பள்ளிகள் மீண்டும் திறப்பு!

மேலும், தகவல்களுக்கு தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளவும். தருமபுரியில் உள்ளவர்கள் 9445000217 எண்ணிற்கும், பென்னாகரத்தில் உள்ளவர்கள் 9445000218 எண்ணிற்கும், பாலக்கோடில் உள்ளவர்கள் 9445000219 எண்ணிற்கும், அரூர் உள்ளவர்கள் 9445000220 எண்ணிற்கும், பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் 9445000221, காரிமங்கலம் – 9445796431, நல்லம்பள்ளி – 9445796432. குடும்ப அட்டைகள் தொடர்பாக யாரையும் தொடர்பு கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இடைத்தரகர்கள் மற்றும் மூன்றாம் நபர்கள் விவரங்களை குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 , 04342 233299 -ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!