புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்திய குடிமகனின் குடியுரிமை சான்றாக ரேஷன் கார்டு உள்ளன. மேலும் புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களில் காத்திருக்கத் தேவையில்லை. எளிமையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான செயல்முறைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள்:

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கு அடிப்படை அடையாள அட்டையாக ரேஷன் கார்டு உள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த கார்டு அனைத்து இடங்களிலும் பயன்படுகிறது. எனவே இதன் தேவையை உணர்ந்து அதிகமானோர் தற்போது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்க முன்வந்துள்ளனர். இருப்பினும் ரேஷன் கார்டை எப்படி விண்ணப்பிப்பது என்று குழப்பம் அடைகின்றனர்.

எந்த அலுவலகத்திற்கு சென்று யாரை பார்க்க வேண்டும் என்றெல்லாம் அவர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்து உள்ளது. இந்த சந்தேகத்தை போக்கத் தான், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து குடுமபத்தினரும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் அதே மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலை – பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

1.புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முன், பழைய ரேஷன் அட்டையில் இருந்து உங்கள் பெயரை நீக்க வேண்டும்.

2. மேலும் ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

3. ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

4.முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.

5.இப்போது திரையில் ஒரு படிவம் தோன்றும். அந்த படிவத்தை பயனாளிகள் நிரப்ப வேண்டும்.

காப்பீட்டு நிறுவனத்தில் 93 பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

6.அனைத்து தகவல்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

7. இணைக்கும் ஆவணத்தின் அளவு 1.0 MB அளவிலும், png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஃபார்மெட்டிலும் இருத்தல் வேண்டும்

8.பின்னர் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும். பின்னர் ‘உறுதிப்படுத்து’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9.கிளிக் செய்த பிறகு ஒரு reference எண் கிடைக்கும், அதை பத்திரமாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here