திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 8ம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஏப்ரல் 8ம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - ஏப்ரல் 8ம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 8ம் தேதி தரிசன டிக்கெட் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாமி தரிசனம் செய்ய ஏப்ரல் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் வெளியிடப்படவுள்ளது.

திருப்பதி:

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் முதல் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் விநியோகம் ஒவ்வொரு மாதமும் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது.

தமிழக அரசு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழா மற்றும் பூஜைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும். அந்த வகையில் கடந்த மார்ச் 13ம் தேதி திருப்பதியில் தெப்போற்சவம் நடைப்பெற்று முடிந்தது. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பிறகு தியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – விவசாயிகள் குற்றச்சாட்டு!

இந்த டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில் சில தொழில்நுட்ப கோளாறுகளால் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1000 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று மூலவருக்கு அபிஷேகம் நடப்பதால், அன்று ஒருநாள் மட்டும் மாலை 3 மணிக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here