EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு! முக்கிய அம்சங்கள் இதோ!

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு! முக்கிய அம்சங்கள் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு! முக்கிய அம்சங்கள் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – ரூ.7 லட்சம் வரை இலவச காப்பீடு! முக்கிய அம்சங்கள் இதோ!

EPFO அமைப்பு வழங்கும் EDLI இன்சூரன்ஸ் திட்டம் பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் வரையுள்ள இலவச காப்பீடு சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காப்பீடு திட்டம்

வருங்கால வைப்பு நிதி தொடர்பான பெரும்பாலான விதிகளை பயனர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஏனென்றால் EPFO சந்தாதாரர்கள் பணம் எடுப்பதில் இருந்து பரிமாற்றம் செய்வது வரை அனைத்தும் இன்று ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த சேவையில் பேலன்ஸ், EPF பரிமாற்றம் அல்லது PF திரும்பப் பெறுதல் ஆகியவற்றைத் தவிர பல அம்சங்கள் இதில் உள்ளன. அந்த வகையில் EPF அமைப்பில் பெரும்பாலான மக்களுக்கு தெரியாத ஒரு முக்கியமான அம்சம் ஒன்று இருக்கிறது.

அதனால் EPFO கணக்கில் சந்தா செலுத்துபவர்கள் இந்த அம்சத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். அதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு EPF கணக்கில் 7 லட்சம் ரூபாய் வரை இலவச ஆயுள் காப்பீட்டுத் தொகையை (EDIL இன்சூரன்ஸ் கவர்) EPFO வழங்குகிறது. இது EPF கணக்குடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் எந்தவொரு பணியாளரும் தனது சேவைக் காலத்தில் எந்தவிதமான பங்களிப்பையும் வழங்க வேண்டியதில்லை. இப்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த வசதியை வழங்குகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் EPFO உறுப்பினருக்கு தற்செயலான மரணம் ஏற்பட்டால், அவரது நாமினி ஆயுள் காப்பீட்டுத் தொகையை கோரலாம். அதாவது, EPFO உறுப்பினர்கள், ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், EPFO உறுப்பினர் இறந்தால் அதிகபட்சமாக ரூ.7 லட்சத்தை காப்பீட்டுத் தொகையின் கீழ் நாமினிக்கு செலுத்த முடியும். இதற்கு முன்னதாக இதன் வரம்பு ரூ.3,60,000 ஆக இருந்தது. பின்னர், காப்பீட்டுத் தொகையின் வரம்பு ரூ.6 லட்சமாகவும், செப்டம்பர் 2020ல் அதன் வரம்பு ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!

தொடர்ந்து இந்த போனஸ் வரம்பு ரூ.1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. வழக்கமாக ஒரு பணியாளரின் மரணத்தில், நாமினி கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தை விட 30 மடங்கு மற்றும் போனஸுடன் 20% பெறுகிறார். அதாவது EPFO சந்தாதாரர்களுக்கு தற்போதுள்ள ரூ.15,000 அடிப்படை வருமானத்தின் உச்சவரம்புப்படி, 30x ரூ.15,000 = ரூ.4,50,000 கிடைக்கும். இது தவிர, போனஸ் தொகையாக ரூ.2,50,000 உரிமைகோருபவருக்கு இந்தத் தொகை அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இருக்கலாம். இந்த காப்பீட்டுத் தொகையை பெற இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் தேவைப்படும்.

இப்போது பிஎஃப் கணக்கில் நாமினி இல்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசு இந்தத் தொகையைப் பெறலாம். மேலும் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க, காப்பீட்டுப் படிவத்துடன், முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டிய படிவத்தையும் கொடுக்க வேண்டும். இந்த படிவத்தை முதலாளி சரிபார்த்த பிறகு காப்பீட்டுப் பணம் பெறப்படுகிறது. இதற்கிடையில் PF கணக்கு வைத்திருப்பவரின் மரணம், பணியில் இருக்கும் போது அதாவது ஓய்வு பெறுவதற்கு முன் நடந்தால் மட்டுமே PF கணக்கில் உள்ள இந்தக் காப்பீட்டை நாமினிகள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!