EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!

0
EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!
EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!
EPFO ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – எந்த நேரத்திலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று கொண்டிருக்கும் ஓய்வூதியதாரர் கட்டாயமாக வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் சான்றிதழ்:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டம் கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பான பல பலன்களை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெரும் ஊழியர் உயிரோடு தான் இருக்கிறாரா என்பதற்கு வாழ்க்கை சான்றிதழ் மிகவும் அவசியமாகும். ஜீவன் பிரமான் பத்ரா அல்லது வாழ்க்கை சான்றிதழ் EPFO திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கியமான ஆவணமாக விளங்கி வருகிறது

Exams Daily Mobile App Download

EPFO திட்டத்தின் மூலமாக ஓய்வூதியம் வாங்கி கொண்டிருக்கும் ஊழியர் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், பொது சேவை மையம் (CSC ), தபால் அலுவலகம், தபால்காரர், UMANG ஆப் மற்றும் அருகிலுள்ள EPFO அலுவலகம் ஆகியவற்றில் வாழ்க்கைச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம். அவ்வப்போது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும், ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO) எண், ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியனவும் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க மிகவும் அவசியமானதாகும்.

ஜீவன் பிரமன் விசாரணை, பிபிஓ எண், பிபிஓ விசாரணை/பணம் செலுத்துதல் மற்றும் ஓய்வூதிய நிலையை அறிவது போன்ற சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில், வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் ஓய்வூதிய பலன்களை பெற்று கொண்டிருக்கும் ஓய்வூதியதாரர் இனிமேல் வாழ்க்கை சான்றிதழை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பித்த நாளிலிருந்து 1 வருடத்திற்கு செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!