EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் இ-பாஸ்புக் பெறும் வழிமுறைகள் இதோ!

0
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் இ-பாஸ்புக் பெறும் வழிமுறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மூலம் இ-பாஸ்புக் பெறும் வழிமுறைகள் இதோ!
EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் இ-பாஸ்புக் பெறும் வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் EPFO இ-பாஸ்புக்கை ஆன்லைன் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதன் மூலம் உங்களின் இருப்பு தொகை குறித்த விவரங்களை அறிய முடியும். EPFO இ-பாஸ் புக்கை பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

EPFO:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. சட்டம் 1952 ன் கீழ் வருங்கால வைப்பு நிதி கட்டாயமாகும். நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால் EPFO தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. தற்போது பிஎஃப் தொகைக்கு 8.10% வட்டி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை 8.50% வட்டி வழங்கப்பட்ட நிலையில் அது 40 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தில் பிஎப் கணக்குதாரர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதனால் கணக்குதாரர் தங்களுக்கென ஒரு நாமினி நியமிக்க வேண்டும். அவ்வபோது புதிய அறிவிப்புகளை EPFO தங்களின் கணக்குதாரர்களுக்கு அறிவித்து வருகிறது. நடப்பாண்டு முதல் PF பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2 கணக்குகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லட்சத்திற்கு PF பங்களிப்பு வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2.5 லட்சத்திற்கு குறைவான கணக்குகளுக்கு வரி கிடையாது. பிஎப் கணக்குடன் மற்றொரு வங்கி கணக்கை இணைக்க வேண்டும். அப்போது தான் PF பணத்தை கிளைம் செய்ய முடியும். தற்போது இ – பாஸ்புக் மூலம் EPFO கணக்குதாரர் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

EPFO இ-பாஸ் புக் பதிவிறக்கம் செய்யும் முறைகள்:
  • https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அடுத்ததாக உங்களின் கணக்கு விவரம், யுஏஎன் எண்ணை பதிவு செய்து, பாஸ்வேர்டு, கேப்ச்சா கோட் ஆகியவற்றையும் பதிவிட வேண்டும்.
  • பிறகு திரையில் வரும் லாகின் பட்டனை கிளிக் செய்து உங்கள் ஐடி எண்ணை உள்ளிட வேண்டும்.
  • உடனே உங்களின் இ-பாஸ் புக் திரையில் தோன்றும் அதை பிஎப் வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here