இன்னும் 6 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
இன்னும் 6 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்னும் 6 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இன்னும் 6 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூலை மாதத்தில் மீதமுள்ள 15 நாட்களில் கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலையும் இப்போது பார்க்கலாம்.

வங்கி விடுமுறை

இந்தியாவில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அனைத்தும் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட 14 நாட்களுக்கு மூடப்படும் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்த விடுமுறை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த வகையில் இம்மாதம் துவங்கி இதுவரை 15 நாட்கள் முடிவு பெற்றிருக்கும் நிலையில் இதில் 8 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருந்தது. தொடர்ந்து அடுத்து வரும் 15 நாட்களில் இன்னும் 6 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம்.

Exams Daily Mobile App Download

இப்போது, ஜூலை மாதத்தில் எட்டு வங்கி விடுமுறைகள் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை வார இறுதி விடுமுறைகள் ஆகும். இந்த தினங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும். அதனால் வங்கி கிளைக்கு செல்வதற்கு முன், அந்தந்த நகரத்தில் உள்ள வங்கி விடுமுறைகளின் பட்டியலை வாடிக்கையாளர்கள் சரிபார்ப்பது நல்லது. இப்போது ஜூலை மாதத்தில் மீதமுள்ள ஆறு வங்கி விடுமுறைகளின் பட்டியல் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வார விடுமுறை? முக்கிய உத்தரவு!

ஜூலை 16: ஹரேலா காரணமாக டேராடூனில் வங்கிகள் மூடப்படும்.

ஜூலை 17: மூன்றாவது ஞாயிறு

ஜூலை 23: நான்காவது சனிக்கிழமை

ஜூலை 24: நான்காவது ஞாயிறு

ஜூலை 26: கேர் பூஜையை முன்னிட்டு அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31: ஐந்தாவது ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here