சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: அதிரடியாக குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை திடீரென குறைந்து விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை குறைவு:

தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்கள் தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அரண்டு போயுள்ளது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது. உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

ஆண்டாண்டு காலமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வந்ததற்கான காரணமே இது தான். சிக்கலின் போது நமக்கு தேவைப்படும் பணம், தங்கம் தான் என்பதை உலக அளவிலான முதலீட்டாளர்கள் மீண்டும் ஒருமுறை உணர தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் அட்சயதிரிதியை கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் கடைகளில் நேரடி விற்பனை நடக்கவில்லை.

TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – பாடம் வாரியாக தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

ஆன்லைன் மூலம் குறைந்த அளவு மட்டுமே நகைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்தால் பொதுமக்கள் பெருமளவில் கடைகளுக்கு வந்து நகைகள் வாங்கினர். மேலும் அட்சயதிரிதியை அன்றும், முந்தைய நாள் என 2 நாட்கள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.856 குறைந்தது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,775க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.50-க்கு விற்பனை ஆகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!