TNUSRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு முறை விளக்கம்!

0
TNUSRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வு முறை விளக்கம்!
TNUSRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வு முறை விளக்கம்!TNUSRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & தேர்வு முறை விளக்கம்!
TNUSRB தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & தேர்வு முறை விளக்கம்!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு பாடத்திட்டம் என்ன? தேர்வு முறை எப்படி? என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தமிழக போலீஸ் தேர்வு

தமிழகத்தில் அரசு வேலை வாங்க வேண்டும் என பலர் கனவுடன் இருக்கின்றனர். கொரோனா காலத்தில் பல போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஒவ்வொரு தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சீருடைப். பணியாளர் தேர்வு வாரியம் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலமாக 3,552 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு ஆகும். அதில் 40% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். அடுத்த பகுதி 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

தமிழ் மொழி தகுதித் தேர்வு பாடத்திட்டம்:

இலக்கணம் – எழுத்து, சொல், பொருள், பொது, யாப்பு, அணி, மொழித்திறன், பிரித்து எழுதுதல், பிழைத் திருத்தம், எதிர்ச்சொல், சேர்த்து எழுதுதல், மொழிபெயர்ப்பு

இலக்கியம் – திருக்குறள், தொல்காப்பியம், கம்பராமயணம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், அறநூல்கள், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியம், புதுக்கவிதை, மொழிப்பெயர்ப்பு நூல்கள் ஆகியவை வரும்

பொது அறிவு – இயற்பியல், வேதியியல், உயிரியல், சூழ்நிலையியல், உணவு & ஊட்டச்சத்தியல், வரலாறு, புவியியல், இந்திய அரசியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

உளவியல் – தொடர்பு அல்லது தொடர்புகொள் திறன், எண் பகுப்பாய்வு, தருக்க பகுப்பாய்வு, அறிவாற்றல் திறன், தகவல்களைக் கையாளும் திறன் ஆகியவற்றில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

கணிதம் – சுருக்குக, மீ.பெ.வ & மீ.சி.ம, எண்ணியல், விகிதம், சதவீதம், சராசரி, வயது கணக்குகள், லாபம் & நட்டம், நேரம் & வேலை, சங்கிலி தொடர், குழாய் & தண்ணீர் தொட்டி, தனிவட்டி, கூட்டு வட்டி, அளவியல், பரப்பளவு, கன அளவு, புள்ளியியல், கோணங்கள், இயற்கணிதம், தரவு கணக்கீடு ஆகியவை கணிதப் பகுதியில் கேட்கப்படும்.

தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது?

தமிழ் மற்றும் பொது அறிவு பகுதிகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும். புக் பேக் கொஸ்டின் மற்றும் அடைப்புக்குள் உள்ள தகவல்களையும் நன்றாக படிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!