TNTET தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வுக்கு தயாராகும் முறை!

0
TNTET தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வுக்கு தயாராகும் முறை!
TNTET தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வுக்கு தயாராகும் முறை!
TNTET தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வுக்கு தயாராகும் முறை!

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற இருப்பதால் பல லட்ச விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது. தற்போது TET தேர்விற்கு என்னென்ன பாடத்திட்டங்கள் இருக்கிறது என்பது குறித்தான அனைத்து விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தாண்டு நடைபெற இருக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாளை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும் எழுதலாம். அதாவது, 12 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) தேர்ச்சி பெற்றவர் முதல் தாளை எழுதலாம். ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) அல்லது (B.Ed) படித்தவர்கள் இரண்டாம் தாளை எழுதலாம்.

Exams Daily Mobile App Download

தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விற்கு எந்தெந்த பாடத்திட்டங்கள் இருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

முதல் தாள்: முதல் தாளில் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய ஒவ்வொன்றிலும் இருந்து 30 கேள்விகளும், கேட்கப்படும். தற்போது முதல் தாளிற்கான பாட திட்டங்களை பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 – 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள்: முதல் தாளை போல இதிலும் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு பகுதியில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும். தற்போது இரண்டாவது தாளிற்கான பாடத் திட்டங்களை பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

மீண்டும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிகரிக்கும் கொரோனா! மக்கள் அவதி!

மேலும்,  http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20I.pdf, http://www.trb.tn.nic.in/TET_2022/16042022/TNTET%20Paper%20II.pdf என்கிற இணையதள முகவரியின் மூலமாகவும் பாடத்திட்டங்களை டவுன்லோட் செய்து படித்துக்கொள்ளலாம். இந்த தேர்விற்கு 6 முதல் 12 வகுப்பு பாடத்திட்டங்களை நன்றாக படிக்க வேண்டும். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான இலக்கணம், செய்யுள், உரைநடை பகுதியை நன்றாக படிக்க வேண்டும். இதே போல கணிதம், அறிவியல் என அனைத்திற்கும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படித்தாலே போதுமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!