TNTET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!

0
TNTET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி வெளியீடு!
TNTET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - தேர்வு தேதி வெளியீடு!
TNTET 2022 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – தேர்வு தேதி வெளியீடு!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு இம்மாத நடைபெற இருப்பதாக அறிவித்த நிலையில் நிர்வாக காரணங்களால் இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு தொடர்பான அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இதற்கான முதல் தாளுக்குரிய தேர்வானது செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது.

இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

TNPSC துறைத்தேர்வு அறிவிப்பு டிசம்பர் 2022 – வெளியீடு || விண்ணப்பிக்கும் அனைத்து விவரங்களுடன் !

Exams Daily Mobile App Download

அதனால் அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இத்தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை மற்றும் Admit Card குறித்த விவரங்கள் அக்டோபர் மாதத்தில் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய http://trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Download Notfication

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!