TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிமுகம்!

0
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிமுகம்!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிமுகம்!
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிமுகம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிடத்திற்கான தேர்வை கணினி வழியில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

கணினி வழி தேர்வு:

தமிழக அரசு துறைகளில் பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில், ஒவ்வொரு நிலை பதவிகளுக்கும் என்று அரசு தனி தனியாக குரூப் வாரியாக தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தமிழ் மொழிக்கும், மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு TNPSC தேர்வுகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, தேர்வுகளில் முதல் பகுதியான மொழி பாடப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு விருப்பங்கள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி மட்டுமே மொழிப் பகுதியில் இருக்கும்.

தமிழக அரசு வேலைவாய்ப்பு – ரூ.50,000/- சம்பளம் || 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

அதில், தேர்வர்கள் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவர்களின் விடைத்தாள் அடுத்த பகுதிக்கு தகுதி பெரும் என்று அரசு அறிவித்திருந்தது. இதுபோல் தேர்வுகளில் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இன்னும் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்புகளை தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.

Ashok Leyland சென்னை வேலைவாய்ப்பு 2022 – கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்பதவிக்கான தேர்வு ஜூன் 19ம் தேதி இரண்டு பகுதிகளாக நடக்க இருக்கிறது. காலை 9.30 முதல் 12.30 மணிவரை தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை பொது அறிவுத் தேர்வும் நடக்க உள்ளது. ஏப்ரல் 30ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். புதியதாக இந்த தேர்வுகளை கணினி வழியில் நடத்த இருப்பதாக TNPSC அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர் இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போதே, அனைத்து ஆதார சான்றிதழ்களையும் / ஆவணங்களையும் PDF வடிவில் 200 KBக்கும் மிகாமல் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!